கோடநாடு விவகாரம் பற்றி சபையில் விவாதிக்க கூடாது| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கோடநாடு விவகாரம் பற்றி சபையில் விவாதிக்க கூடாது'

Updated : ஆக 23, 2021 | Added : ஆக 23, 2021 | கருத்துகள் (17)
Share
சென்னை : ''நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்து, சட்டசபையில் விவாதிக்கக் கூடாது என்று விதி உள்ளது,'' என, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.ஜெயகுமார் அளித்த பேட்டி:சட்டசபை விதி 55ன் கீழ், கோடநாடு எஸ்டேட் விவகாரத்தை சட்டசபையில் எழுப்ப உள்ளதாக, காங்கிரசை சேர்ந்த செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். சட்டசபையில் விவாதிக்க, நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள்
'கோடநாடு விவகாரம் , சபை விவாதிக்க கூடாது'

சென்னை : ''நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்து, சட்டசபையில் விவாதிக்கக் கூடாது என்று விதி உள்ளது,'' என, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
ஜெயகுமார் அளித்த பேட்டி:

சட்டசபை விதி 55ன் கீழ், கோடநாடு எஸ்டேட் விவகாரத்தை சட்டசபையில் எழுப்ப உள்ளதாக, காங்கிரசை சேர்ந்த செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். சட்டசபையில் விவாதிக்க, நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் உள்ளன. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்து, எந்த காலத்திலும் விவாதித்தது கிடையாது. நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கில் தீர்ப்பை எதிர்பார்த்திருக்கும் சூழலில், சட்டசபையில் பேச வேண்டிய அவசியம் இல்லை.

எங்கள் மடியில் கனம் இல்லை; வழியில் பயம் இல்லை. அ.தி.மு.க.,விற்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதே தி.மு.க., அரசின் நோக்கமாக உள்ளது.விழுப்புரத்தில், தி.மு.க., கொடி நட்ட 13 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி இறந்துள்ளான். இதற்காக, உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி மீது, குழந்தை தொழிலாளர்களை பணி அமர்த்திய சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., இன்பதுரை கூறுகையில், ''தமிழக சட்டசபை காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப் போவதாக தெரிவித்துள்ளார்.

''அவர் தன் வேட்பு மனுவில், அவர் மீது மூன்று வழக்குகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். ''ஒரு வழக்கு சி.பி.ஐ., வழக்கு. இது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தின் கீழ் விவாதிக்கலாம் என்று கூறினால் ஏற்பாரா?'' என கேள்வி எழுப்பினார்.


நாவலை விட மர்மம்!



சட்டசபை காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது:நீலகிரி மாவட்டம், கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம், ராஜேஷ்குமார் நாவலை விட மர்மமாக உள்ளது. ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்தால், தேவை இல்லாததை பேசுகின்றனர். எதற்கு இந்த அச்சம்; பயமில்லை என்றால் நாங்கள் சந்திக்க தயார் என கூறலாமே?
ஜெ., ஆன்மா இருக்குமானால் உண்மை வெளிவரும். சட்டசபையில் விவாதிக்க தயாராக இல்லை என்றால், மக்கள் மன்றத்தில் விவாதிக்க அழைக்கிறோம். ஜெயலலிதாவுக்கு இந்த ஆட்சி நீதி வழங்கும். சரியான பாதையில் விசாரணை செல்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X