பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கல்லுாரிகளில் இளங்கலை சேர்க்கை

Added : ஆக 23, 2021
Share
Advertisement
சிவகங்கை : சிவகங்கை மாவட்ட அரசு கல்லுாரிகளில் 2021-- 22 ம் கல்வி ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது.கொரோனா ஊரடங்கிற்கு பின் செப்., 1 முதல் கல்லுாரிகள் திறக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதனால் அந்தந்த கல்லுாரி முதல்வர்கள் கல்லுாரி வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க உயர்கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது. இந்த கல்வி ஆண்டிற்கான இளங்கலை

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட அரசு கல்லுாரிகளில் 2021-- 22 ம் கல்வி ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது.

கொரோனா ஊரடங்கிற்கு பின் செப்., 1 முதல் கல்லுாரிகள் திறக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இதனால் அந்தந்த கல்லுாரி முதல்வர்கள் கல்லுாரி வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க உயர்கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது. இந்த கல்வி ஆண்டிற்கான இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்கள் சேர்க்கையை நடத்தவும் முதல்வர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

அரசு கல்லுாரிகளில் சேர்க்கை

மாவட்டத்தில் உள்ள சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரி, அரசு மகளிர் கல்லுாரி, காரைக்குடி அழகப்பா அரசு கல்லுாரி, பூலாங்குறிச்சி அரசு கல்லுாரிகளில் சிறப்பு ஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்தது. முன்னாள் ராணுவ வீரர் வாரிசு, விளையாட்டு வீரர், என்.சி.சி., அந்தமான் நிகோபார் தீவில் இருந்து வந்த தமிழர்களின் வாரிசுகளுக்கு இளங்கலை பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது.

ஆக.,26 வரை சேரலாம்

அரசு கல்லுாரிகளில் இளங்கலை பட்டபடிப்பிற்கான மாணவர் சேர்க்கை ஆக.26 வரை நடக்கிறது. ஆக.,24 ல் பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுக்கு சேர்க்கை நடக்கிறது. ஆக.,25 ல் பி.ஏ., தமிழ், ஆங்கிலம் பிரிவுக்கும், ஆக.,26 ல் பி.ஏ., வரலாறு, பொருளாதாரம், வணிகவியல், பி.பி.ஏ., போன்ற பாடப்பிரிவுகளுக்கு சேர்க்கை நடக்கிறது. ஒவ்வொரு கல்லுாரியிலும் இரண்டு ஷிப்டுகளுக்கு ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையில் மாணவர் சேர்க்கை நடக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X