பொது செய்தி

இந்தியா

காற்றை சுத்தம் செய்யும் புகை கோபுரம் அறிமுகம்

Updated : ஆக 23, 2021 | Added : ஆக 23, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி : இந்தியாவில் முதன் முதலாக டில்லியில், 'ஸ்மோக் டவர்' எனப்படும் காற்றை சுத்தம் செய்யும் புகை கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.தலைநகர் டில்லியில் காற்று மாசு அதிகம். காற்று மாசை குறைக்க, டில்லி அரசு பல கட்டுப்பாடுகளை விதித்த போதும் குறையவில்லை. இதையடுத்து, காற்றை சுத்தம் செய்து அனுப்பும் ஸ்மோக் டவர் எனப்படும் புகை கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

புதுடில்லி : இந்தியாவில் முதன் முதலாக டில்லியில், 'ஸ்மோக் டவர்' எனப்படும் காற்றை சுத்தம் செய்யும் புகை கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.



latest tamil news



தலைநகர் டில்லியில் காற்று மாசு அதிகம். காற்று மாசை குறைக்க, டில்லி அரசு பல கட்டுப்பாடுகளை விதித்த போதும் குறையவில்லை. இதையடுத்து, காற்றை சுத்தம் செய்து அனுப்பும் ஸ்மோக் டவர் எனப்படும் புகை கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக டில்லி கன்னாட் பிளேசில் அமைக்கப்பட்டுள்ள இந்த புகை கோபுரத்தை, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று திறந்து வைத்தார்.


latest tamil news



அப்போது அவர் பேசியதாவது: நாட்டிலேயே முதல் முறையாக காற்றை சுத்தம் செய்ய, டில்லியில் புகை கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவி அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. மும்பை மற்றும் டில்லி ஐ.ஐ.டி.,க்களின் தொழில்நுட்ப உதவியுடன் 'டாடா புராஜக்ட்ஸ் லிமிடெட்' இந்தக் கோபுரத்தை நிர்மானம் செய்து கொடுத்தது. இது, 1 வினாடிக்கு 1,000 கியூபிக் மீட்டர் காற்றை சுத்தம் செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-ஆக-202113:58:25 IST Report Abuse
ஆரூர் ரங் போராட்டம் நடத்திய பஞ்சாப் விவசாயிகள் தங்கள் நிலங்களில்♨️♨️ வைக்கோல் எரிப்பை நிறுத்தினால் டெல்லியில் புகை மாசு குறையும். ஆனால் அந்த அடாவடி ஆட்களை🤔 காங்கிரசும் கோர்ட்டும் கண்டிப்பதில்லை
Rate this:
Cancel
CBE CTZN - Coimbatore,இந்தியா
24-ஆக-202109:24:29 IST Report Abuse
CBE CTZN வேப்பமரங்களை அதிகம் நட்டு பராமரித்து வந்தாலே போதும்.. ஓரிரு வருடங்களில் காற்று மாசு வெகுவாக குறையும்.
Rate this:
Cancel
Nagar - Dukhan ,கத்தார்
24-ஆக-202104:56:11 IST Report Abuse
Nagar அடர்த்தியான மரங்களை நட்டு - மாசு படுத்தும் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களை தடை செய்தல் காற்று தானாகவே சுத்தம் ஆகும். டெல்லியில் தனி நபர் கார்களை தடை செய்யலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X