பொது செய்தி

தமிழ்நாடு

பழைய வழித்தட பஸ்களை நிறுத்தி விட்டு புதிய வழித்தடமா; பயணிகள் கொதிப்பு

Added : ஆக 23, 2021
Share
Advertisement
திருப்புவனம் : மானாமதுரையில் இருந்து திருப்புவனத்திற்கு இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.மானாமதுரையில் இருந்து திருப்புவனத்திற்கு இரண்டு டவுன் பஸ்கள் நாள் ஒன்றுக்கு ஆறு முறை வந்து சென்றது. நாளடைவில் ஒரே ஒரு டவுன் பஸ் மூன்று முறை வந்து சென்ற நிலையில் தற்போது அந்த பஸ்சும் நிறுத்தப்பட்டு விட்டது.பயணிகள் தரப்பில்

திருப்புவனம் : மானாமதுரையில் இருந்து திருப்புவனத்திற்கு இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மானாமதுரையில் இருந்து திருப்புவனத்திற்கு இரண்டு டவுன் பஸ்கள் நாள் ஒன்றுக்கு ஆறு முறை வந்து சென்றது. நாளடைவில் ஒரே ஒரு டவுன் பஸ் மூன்று முறை வந்து சென்ற நிலையில் தற்போது அந்த பஸ்சும் நிறுத்தப்பட்டு விட்டது.பயணிகள் தரப்பில் கூறுகையில்:நான்கு வழிச்சாலையில் உள்ள வெள்ளிகுறிச்சி, வாகுடி, செம்பராயனேந்தல், அன்னியேந்தல் உள்ளிட்ட கிராமங்களில் எந்த பஸ்சும் நிறுத்தப்படுவதில்லை. எனவே இந்த டவுன் பஸ்சை நம்பியே நாங்கள் மானாமதுரை, திருப்புவனம் வந்து செல்கிறோம்,

தற்போது பஸ்களை நிறுத்திவிட்டு இடைக்காட்டூர், பதினெட்டாம்கோட்டை, ராஜகம்பீரம், குவளைவேலி உள்ளிட்ட ஊர்களுக்கு புதிய பேருந்து இயக்கப்படுவது போல அதிகாரிகள் நடிக்கின்றனர்.புதிய பஸ்கள் வாங்காமல் புதிய வழித்தடங்களுக்கு எப்படி பஸ் இயக்க முடியும். பழைய வழித்தடங்களில் செல்லும் பேருந்துகளை ரத்து செய்துவிட்டு புதிய வழித்தடங்களில் இயக்குவது சிரமத்தை ஏற்படுத்தும். விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள சூழலில் அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X