பத்தே நாளில் பஞ்சரான கான்கிரீட் பாலம்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
சிங்கம்புணரி, : சிங்கம்புணரியில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அமைக்கப்படும் கால்வாய் கட்டுமானங்கள் தரமில்லாமல் அமைக்கப்படுவதால் ஓரிரு நாட்களிலேயே இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது.இப்பேரூராட்சி வழியாக செல்லும் காரைக்குடி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ரோட்டின் இருபுறமும் மூடப்பட்ட கான்கிரீட் கால்வாய் அமைக்கப்படுகிறது.

சிங்கம்புணரி, : சிங்கம்புணரியில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அமைக்கப்படும் கால்வாய் கட்டுமானங்கள் தரமில்லாமல் அமைக்கப்படுவதால் ஓரிரு நாட்களிலேயே இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இப்பேரூராட்சி வழியாக செல்லும் காரைக்குடி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ரோட்டின் இருபுறமும் மூடப்பட்ட கான்கிரீட் கால்வாய் அமைக்கப்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் வளைவு, நெளிவுகளோடு சில இடங்களில் தரம் குறைவாக கால்வாய் அமைக்கப்படுவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் காசியாபிள்ளை நகர் அருகே பத்து நாட்களுக்கு முன்பு இக்கால்வாய் அமைக்கப்பட்டது. ஆக. 22 ல் அந்த வழியாக வாகனம் ஒன்று சென்ற நிலையில் பாரம் தாங்காமல் கால்வாயின் ஒரு பகுதி உடைந்து விழுந்தது. உடைப்பு ஏற்பட்ட இடத்தில் கூடுதலாக தளம் அமைக்கப்பட்டு உடைப்பு சரி செய்யப்பட்டது.

சாலை விரிவாக்கம்,சாலையின் உயரம், கால்வாய், சாலை ஆக்கிரமிப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் மாவட்ட நிர்வாகம் நேரில் தலையிட்டு கண்காணிக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X