கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு வழக்கு புதிய அமர்வில் இன்று முதல் விசாரணை

Added : ஆக 23, 2021
Share
Advertisement
சென்னை--மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. இந்த வழக்குகளின் விசாரணை, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.கண்ணம்மாள் இடம் பெற்ற அமர்வில், இன்று முதல் துவங்குகிறது.10.5 சதவீதம்தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான

சென்னை--மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.

இந்த வழக்குகளின் விசாரணை, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.கண்ணம்மாள் இடம் பெற்ற அமர்வில், இன்று முதல் துவங்குகிறது.10.5 சதவீதம்தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி, தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை எதிர்த்து, 20க்கும் மேற்பட்ட வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறியிருந்ததாவது: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என தெரிவித்தது. அதன் அடிப்படையில் தான், இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம், 1983ல் கணக்கெடுப்பு நடத்தியது.அதில், தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில், 13.01 சதவீதம் பேர் வன்னியர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அந்த புள்ளி விபரங்களின் அடிப்படையிலும் இந்த இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அரசியல் காரணங்களோ, அவசரமோ ஏதும் இல்லை.இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டது.விசாரணைஇந்த வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, இந்த வழக்குகளின் விசாரணையில் இருந்து விலகுவதாக, நீதிபதி ஆதிகேசவலு தெரிவித்தார்.

இதையடுத்து, வேறு நீதிபதியுடன் இந்த வழக்குகள் விசாரிக்கப்படும் என்று தலைமை நீதிபதி அறிவித்திருந்தார். அதன்படி இந்த வழக்கு களை, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.கண்ணம்மாள் அமர்வு விசாரிக்கும் என உயர் நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில், இந்த வழக்குகளின் விசாரணை இன்று முதல் துவங்க உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X