அரசியல் செய்தி

தமிழ்நாடு

துரைமுருகனின் 50 ஆண்டு கால சட்டசபை பணியை பாராட்டி தீர்மானம்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனின், 50 ஆண்டு கால சட்டசபை பணியை பாராட்டி, நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தீர்மானத்தை முன்மொழிந்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:நீர்வளத் துறை மானிய கோரிக்கையை, துறை அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்ய உள்ளார். அவர், தி.மு.க., பொதுச் செயலராகவும், சட்டசபை முன்னவராகவும் உள்ளார்.வழித்துணை சட்டசபையில் முதன் முதலில், நீர்வளத் துறை

தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனின், 50 ஆண்டு கால சட்டசபை பணியை பாராட்டி, நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானத்தை முன்மொழிந்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:நீர்வளத் துறை மானிய கோரிக்கையை, துறை அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்ய உள்ளார். அவர், தி.மு.க., பொதுச் செயலராகவும், சட்டசபை முன்னவராகவும் உள்ளார்.வழித்துணை சட்டசபையில் முதன் முதலில், நீர்வளத் துறை மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படுவது மகிழ்ச்சிக்குரியது; அதற்கு வாழ்த்துகள்.நுாற்றாண்டு வரலாறு கொண்ட சட்டசபைக்கு, அரை நுாற்றாண்டுக்கும் முன் வந்தவர் தான் துரைமுருகன்; 50 ஆண்டுகளாக, சபை நடவடிக்கைகளில் பங்கேற்று வருகிறார்.தனிப்பட்ட முறையில் சொல்ல வேண்டும் என்றால், எனக்கு வழிகாட்டியாக இருப்பவர்.மனதில் பட்டதை அப்படியே எடுத்துச் சொல்லி, கட்சிக்கும், ஆட்சிக்கும் துணையாக இருக்கக் கூடியவர்.

அவரது ஊர், கே.வி.குப்பம். ஒரு காலத்தில், 'கீழ் வழி துணையான் குப்பம்' என்று அழைக்கப்பட்டது. அப்படி எனக்கு வழித் துணையாக இருப்பவர் தான் துரைமுருகன்; கருணாநிதிக்கும் வழித்துணையாக இருந்திருக்கிறார்.கருணாநிதி அவரை, 'துரை' என்று பாசமாக அழைப்பார். இருவரும் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்பர். கருணாநிதி இதயத்திலேயே ஆசனம் போட்டு அமர்ந்திருந்தவர். அவரிடம் எந்த துறையை கொடுத்தாலும், அதிலே ஒரு முத்திரை பதிப்பார். தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து ஆறுகளின் பெயர்களை, அவர் மடமடவென்று அப்படியே சொல்வார். காவிரி பிரச்னை தொடர்பான அனைத்து தகவல்களையும், தன் மனதில் சேகரித்து வைத்திருக்கிறார். அனைவருடன் இணக்கம்அதேபோல, இந்த கூட்டத்தை அழ வைக்க வேண்டும் என்று நினைத்தால், அழ வைத்து விடுவார்; சிரிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தாலும், சிரிக்க வைத்து விடுவார். தமிழக சட்டசபையில், 50 ஆண்டுகள் பங்கெடுத்து, பொன் விழா நாயகராக உள்ளார். அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிகிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.

அதைத் தொடர்ந்து, சட்டசபை கட்சித் தலைவர்கள், தீர்மானத்தை வழிமொழிந்து, துரைமுருகனுக்கு பாராட்டு தெரிவித்து பேசினர்.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி துணைத் தலைவர்: சட்டசபையில் சந்தோஷமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் துரைமுருகன். அவரது 50 ஆண்டு கால பயணம் என்பது, நெடிய வரலாறு. அவரிடம் இருந்து நிறைய பாடம் கற்றுள்ளேன். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல், அனைவருடனும் இணக்கமாக இருப்பவர். எங்களை கிண்டல் செய்து, பொதுக் கூட்டங்களில் பேசி உள்ளார்.

அவ்வாறு அவர் பேசிய, 'வீடியோ' ஒன்றை பார்த்தேன். அதில் அவர், 'அ.தி.மு.க.,வினர் அனைவரும் சட்டை கையை மடித்து விட்டுள்ளனர்; அதற்கென தனியே பி.ஏ., வைத்திருப்பரோ' என கேட்டிருப்பார். அதை பார்த்தபோது, நானே சிரித்து விட்டேன். விவாதங்களின் போது சூடாகப் பேசுவார்; அடுத்த வினாடி இனிக்கப்பேசுவார். துரைமுருகனிடம் உள்ள நல்ல பழக்க வழக்கங்களை, எம்.எல்.ஏ.,க்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.சபாநாயகர் அப்பாவு: அவர் சிறு வயது முதல், தி.மு.க.,வில் பணியாற்றியவர். கருணாநிதியையும், எம்.ஜி.ஆரையும், இரு கண்கள் போல நேசித்தவர். மும்பையில் இருந்து, எம்.ஜி.ஆர்., தனி விமானத்தில் வந்து, அவரது திருமணத்தில் பங்கேற்றார்.எனினும் தலைவராக கருணாநிதியை ஏற்றுக் கொண்டார். அவர் இறக்கும் வரை, அவருடன் இருந்து, ஆலோசனைகள் வழங்கியவர். சாணக்கியர்மவுரிய மன்னன் சந்திரகுப்தனுக்கு ஆலோசகராக சாணக்கியர் இருந்தது போல், முதல்வருக்கு சாணக்கியராக துரைமுருகன் இருக்கிறார் என, கவர்னர் கூறுவார். அதை கூறி வாழ்த்துகிறேன்.

சபை சிறப்பாக நடக்க, எனக்கு துணையாக உள்ளார்.அமைச்சர் துரைமுருகன்: ஆயிரக்கணக்கான கூட்டங்களில் பேசி உள்ளேன். வார்த்தைகளை தேடி அலைந்ததில்லை; பொருளுக்காகவும் யோசித்தது இல்லை. தற்போது, எனக்கு வார்த்தைகள் வரவில்லை; என்ன பேசுவது என்றும் தெரியவில்லை. என் வாழ்க்கையில், எத்தனையோ வெற்றிகள், தோல்விகள் நடந்திருந்தாலும், அனைத்திற்கும் முத்தாய்ப்பு வைப்பது போல், என் தலைவர் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார். சபையில் உள்ள கட்சித் தலைவர்களும் என்னை பாராட்டியதை பார்க்கும் போது, நெஞ்சம் நெகிழ்கிறது.இதை, நான் எதிர்பார்க்கவில்லை. முதல்வர் என் மீது காட்டிய பாசம் பார்த்து, கிறுகிறுத்து போய் உள்ளேன். கருணாநிதி என் மீது தனி பற்று, பாசம் வைத்திருந்தவர். அவர் மறைவுக்கு பின், வெற்றிடம் இருக்குமோ என்று நினைத்தேன். ஆனால், தந்தையின் பாசத்தை மிஞ்சுகிற வகையில், முதல்வர், நான் நினைத்துக் கூட பார்க்காத கவுரவத்தை தந்துள்ளார்.

அனைவரும் ஒட்டுமொத்தமாக பாராட்டி உள்ளீர்கள். அதற்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. இவ்வளவு பாசத்தை முதல்வர் வைத்திருப்பார் என, நான் நினைக்கவில்லை. எனக்கு பேசத் தெரியவில்லை. முதல் முறையாக, எனக்கு பேசத் தெரியவில்லை என ஒப்புதல் அளிக்கிறேன். எந்த நம்பிக்கையோடு அனைவரும் வாழ்த்தினீர்களோ, அந்த நம்பிக்கைக்கு கொஞ்சமும் சேதாரம் இல்லாமல், மீதமுள்ள வாழ்க்கையை, உங்கள் அனைவர் மதிப்பை பெறும் வகையில் வாழ்ந்து காட்டுவேன்.கண்ணீரை துடைத்தார்துரைமுருகனுக்கு பாராட்டு தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்து, முதல்வர் பேசிய போது, துரைமுருகன் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

தன்னிடமிருந்த கைக்குட்டையால், கண்ணீரை துடைத்தார். அதேபோல், ஏற்புரை நிகழ்த்திய போது, அதை முடிக்க முடியாமல், அவர் கண்களில் கண்ணீர் துளிர்க்க, அமைதியாக கைகளை கூப்பி வணங்கி விட்டு அமர்ந்தார். அப்போது, சபையில் அமைதி நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X