பொது செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ.,க்களுக்கு பரிசு வழங்குவது நிறுத்தம்

Added : ஆக 23, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சட்டசபை மானிய கோரிக்கையின் போது, எம்.எல்.ஏ.,க்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்குவதும், அலுவலக ஊழியர்களுக்கு உணவு வழங்குவதும் நிறுத்தப்பட்டது.சட்டசபையில், துறை வாரியான மானிய கோரிக்கையின் போது, சட்டசபை செயலக ஊழியர்கள், அனைத்து துறை அலுவலக ஊழியர்கள், செய்தித் துறை ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் என, 3,000த்துக்கும் மேற்பட்டோருக்கு, காலை மற்றும் மதிய உணவு வழங்கப்படும்.மதியம்

சட்டசபை மானிய கோரிக்கையின் போது, எம்.எல்.ஏ.,க்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்குவதும், அலுவலக ஊழியர்களுக்கு உணவு வழங்குவதும் நிறுத்தப்பட்டது

.சட்டசபையில், துறை வாரியான மானிய கோரிக்கையின் போது, சட்டசபை செயலக ஊழியர்கள், அனைத்து துறை அலுவலக ஊழியர்கள், செய்தித் துறை ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் என, 3,000த்துக்கும் மேற்பட்டோருக்கு, காலை மற்றும் மதிய உணவு வழங்கப்படும்.மதியம் அசைவ உணவே அதிகம் வழங்கப்படும். இது தவிர, எம்.எல்.ஏ.,க்களுக்கு அந்தந்த துறையின் சார்பில், டிராவல் பேக், சூட்கேஸ், மிக்சி, கைக்கடிகாரம், குக்கர் என, பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்படும்.பால்வளத் துறை மானிய கோரிக்கையின் போது ஆவின் பால் பொருட்கள்; ஹிந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கையின் போது கோவில் பிரசாதங்கள் தரப்படும்.

தற்போது கடும் நிதி நெருக்கடி நிலவுவதால், மானிய கோரிக்கையின் போது உணவு மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை நிறுத்த, முதல்வர் உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.நேற்று சட்டசபையில், துறை ரீதியான மானிய கோரிக்கை துவங்கியது. நீர்வளத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. பரிசுப் பொருட்கள் வினியோகம் நிறுத்தப்பட்ட நிலையில், எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபை பணிக்கு வந்த ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு மட்டும் மதிய உணவு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
24-ஆக-202110:14:22 IST Report Abuse
Girija திமுக சரியான பாதையில் செல்கிறது, இதை நிறுத்த கோரி நான் ஏற்கனவே பலமுறை பதிவிட்டிருந்தேன் இப்போது திமுக செயல்படுத்தி உள்ளது வாழ்த்துக்கள். அதே போல் லட்சக்கணக்கில் மாத சம்பளம் வாங்கும் எம் எல் ஏ , மந்திரி, ஊழியர், பத்திரிகையாளர்களுக்கு இலவச மத்திய உணவும் எதற்கு? அதே போல் பூங்கொத்து நினைவு பரிசையும் தவிர்க்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X