குடிமராமத்து பணி முறைகேடு; விசாரணை கோரிய தி.மு.க.,| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

குடிமராமத்து பணி முறைகேடு; விசாரணை கோரிய தி.மு.க.,

Added : ஆக 23, 2021
Share
தி.மு.க., - நந்தகுமார்: கடந்த ஆட்சியில், மழை நீர் கால்வாய்களை துார் வாராததால், மழை நீர் வெளியேற முடியவில்லை. செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க, முதல்வரிடம் அனுமதி பெற காலதாமதம் ஏற்பட்டது. தாமதமாக தண்ணீரை திறந்ததால், சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.அ.தி.மு.க., - வேலுமணி: கடந்த ஆட்சியில், மழை நீர் கால்வாய்கள் துார் வாரப்பட்டன. புதிதாக கால்வாய்கள் அமைக்கப்பட்டன. இதன் காரணமாக,

தி.மு.க., - நந்தகுமார்: கடந்த ஆட்சியில், மழை நீர் கால்வாய்களை துார் வாராததால், மழை நீர் வெளியேற முடியவில்லை. செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க, முதல்வரிடம் அனுமதி பெற காலதாமதம் ஏற்பட்டது. தாமதமாக தண்ணீரை திறந்ததால், சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அ.தி.மு.க., - வேலுமணி: கடந்த ஆட்சியில், மழை நீர் கால்வாய்கள் துார் வாரப்பட்டன. புதிதாக கால்வாய்கள் அமைக்கப்பட்டன. இதன் காரணமாக, மழை நீர் வேகமாக வெளியேறுகிறது.

காங்., - செல்வப்பெருந்தகை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீரை திறந்து விடுவது தொடர்பாக, முதல்வரிடம் அனுமதி பெற தாமதம் ஏற்பட்டது. அதன்பின், ஒரே நேரத்தில் கூடுதல் நீரை திறந்ததால், சென்னையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.பழனிசாமி - எதிர்க்கட்சி தலைவர்: செம்பரம்பாக்கம் ஏரிக்கு கீழே 100 ஏரிகள் உள்ளன. அப்போது சென்னையை சுற்றி நல்ல மழை பெய்தது. செம்பரம்பாக்கம் ஏரி மட்டுமின்றி அதன் கீழ் உள்ள 100 ஏரிகளும் நிரம்பி, உபரி நீர் வெளியேறியதால் வெள்ளம் ஏற்பட்டது.

அமைச்சர் தியாகராஜன்: 2015ல் செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு தொடர்பாக, முதல்வர் அனுமதி பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டதே வெள்ளத்திற்கு காரணம் என, மத்திய தணிக்கைத் துறை சுட்டிக்காட்டி உள்ளது.மேலும், பேரிடர் மேலாண்மை குழுவை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கூட்ட வேண்டும். அதை ஒரு முறை கூட கூட்டாததால், வழிமுறைகள் வகுக்கப்படவில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

பழனிசாமி: மழைக்காலங்களில் அதிக நீர் வரும் போது மதகுகளை திறக்க அனுமதி கேட்பதில்லை; பொறியாளர்களே முடிவு செய்வர்.நந்தகுமார்: கடந்த ஆட்சியின் போது, குடி மராமத்து பணிகள் எந்த ஊரில் நடக்கிறது; அதன் பட்டியலைக் கொடுங்கள் என, அப்போது எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருந்த துரைமுருகன் பலமுறை கேட்டுள்ளார். ஆனால் தரவில்லை. இந்த திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து ஆராய வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X