பொது செய்தி

தமிழ்நாடு

பீச், பூங்காக்கள் திறப்பு கண்காணிக்க உத்தரவு

Added : ஆக 23, 2021
Share
Advertisement
சென்னை-திரையரங்குகள், கடற்கரைகள், பூங்காக்கள் திறக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு கொரோனா தடுப்பு விதிகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கும்படி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:பொது மக்களின் நலன் கருதி, பொது முடக்கத்தில் பல்வேறு தளர்வுகளை, மாநில அரசு

சென்னை-திரையரங்குகள், கடற்கரைகள், பூங்காக்கள் திறக்கப்பட்டதை தொடர்ந்து, அங்கு கொரோனா தடுப்பு விதிகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்கும்படி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:பொது மக்களின் நலன் கருதி, பொது முடக்கத்தில் பல்வேறு தளர்வுகளை, மாநில அரசு அளித்துள்ளது. அந்த தளர்வுகளை தவறாக பயன்படுத்தினால், மீண்டும் கொரோனா தொற்று பரவ வழிவகுக்கும். அதனால், திரையரங்குகள், பூங்காக்கள், கடற்கரைகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றை கண்காணிக்க, மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, கொரோனா தடுப்புக்கான நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை, அனைத்து இடங்களிலும் முறையாக பின்பற்றுவதை தொடர்ச்சி 7ம் பக்கம்பீச், பூங்காக்கள்...முதல் பக்கத் தொடர்ச்சிஉறுதி செய்தல் அவசியம். சுகாதார ஆய்வாளர்கள், தளர்வுகள் அறிவிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று, ஆய்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொழில் நிறுவனங்கள், திரையரங்குகளில் பணியாற்றும் ஊழியர்களின், உடல் வெப்ப நிலையை பரிசோதித்தப் பின், அவர்களை அனுமதிக்க வேண்டும்.நோய் தொற்று அறிகுறிகள் இருக்கும் ஊழியரை தனிமைப்படுத்தி, பரிசோதனை மேற்கொள்வதுடன், அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருப்பதை, உறுதி செய்ய வேண்டும்.தளர்வு அறிவிக்கப்பட்ட வளாகங்கள், கிருமி நாசினி தெளித்து, துாய்மை படுத்தப்படுகிறதா என்பதை, அந்தந்த உள்ளாட்சி துறையுடன் இணைந்து, சுகாதாரத் துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X