சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுகேஷ் பங்களாவில் சோதனை: சொகுசு கார் பறிமுதல்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
சென்னை-பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், சென்னையில் மின் வேலியுடன் அரண்மனை போல கட்டியுள்ள பங்களாவில், டில்லியை சேர்ந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, ௧௬ சொகுசு கார்கள், 82.50 லட்சம் ரூபாய் பணம், 2 கிலோ தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.அ.தி.மு.க.,வில், ஜெயலலிதா மறைந்த பின், சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் தலைமையில் இரு அணிகள் செயல்பட்டன. அப்போது,

சென்னை-பிரபல மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், சென்னையில் மின் வேலியுடன் அரண்மனை போல கட்டியுள்ள பங்களாவில், டில்லியை சேர்ந்த அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, ௧௬ சொகுசு கார்கள், 82.50 லட்சம் ரூபாய் பணம், 2 கிலோ தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.

அ.தி.மு.க.,வில், ஜெயலலிதா மறைந்த பின், சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் தலைமையில் இரு அணிகள் செயல்பட்டன. அப்போது, 2017ல், சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடந்தது. இரு அணியினரும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரியதால், அச்சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்கியது.இந்த சின்னத்தை மீட்க, சசிகலாவின் அக்கா மகன் தினகரன், குறுக்கு வழியில் முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.அதற்கு ஏற்ப, டில்லியில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்த, பெங்களூரைச் சேர்ந்த மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர், 32, அம்மாநில குற்றப்பிரிவு போலீசாரிடம் சிக்கினார்.அவரிடம் 1.30 கோடி ரூபாய் ரொக்கம், பி.எம்.டபுள்யூ., மற்றும், 'மெர்சிடஸ் பென்ஸ்' கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

டில்லி திகார் சிறை

இரட்டை இலை சின்னத்தை மீட்க, தினகரன் சார்பில் 60 கோடி ரூபாய் பேரம் பேசி, முன்பணமாக சுகேஷ் சந்திரசேகரிடம் 1.30 கோடி ரூபாய் தரப்பட்டு இருப்பதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிந்து, சுகேஷ் சந்திரசேகர், தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜுனா உள்ளிட்டோரை கைது செய்து, டில்லி திகார் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில், தினகரன் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.இந்நிலையில், சிறையில் இருந்தபடி கூட்டாளிகள் வாயிலாக, சுகேஷ் சந்திரசேகர் 200 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இவர் மீது, டில்லி அமலாக்கத் துறை அதிகாரிகள், சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக, சென்னை, கானத்துார் ரெட்டி குப்பம் பகுதியில், கடற்கரைக்கு அருகே, நீச்சல் குளம், மினி தியேட்டர் என, சகலவிதமான வசதிகளுடன், அரண்மனை போல சுகேஷ் சந்திரசேகர் கட்டியுள்ள பங்களாவில் ஏழு நாட்களாக ரகசிய சோதனையில் ஈடுபட்டனர்.

பங்களாவின் மதில் சுவர் மட்டுமே 20 அடி உயரத்திற்கு கட்டப்பட்டு உள்ளது. அதன் மேல், மின் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. நுழைவு வாயில் அருகே, நடிகர், நடிகையர் பயன்படுத்தும், 'கேரவன்' என்ற சொகுசு வேன் நிறுத்தப்பட்டுள்ளது. முக்கிய ஆவணங்கள்பங்களாவின் உள்ளே, 'போர்ஸ், லம்போர்கினி, ரோல்ஸ் ராய்ஸ், ரேஞ்ரோவர், பி.எம்.டபுள்யூ, பார்சுனர்' என, ௧௬ சொகுசு கார்கள் இருந்தன. இந்த கார்களை பறிமுதல் செய்த அமலாக்கத் துறை அதிகாரிகள், ௮௨.௫௦ லட்சம் ரூபாய் பணம், ௨ கிலோ தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றிஉள்ளனர். அத்துடன், பங்களாவிற்கும், 'சீல்' வைத்தனர்.

பெங்களூரில் 11ம் வகுப்பு படிக்கும் போதே, போலீஸ் துணை கமிஷனர் மகன் எனக்கூறி, தொழில் அதிபரிடம் 10 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் சுகேஷ் சிக்கினார்.அதன்பின், மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி பேரன், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மகன் மற்றும் கர்நாடக மாநில ஐ.ஏ.எஸ்., அதிகாரி போல நடித்து, தமிழகம், கேரளா, மஹாராஷ்டிரா, ஆந்திரா என, ஐந்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் 1000 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்துள்ளார். இவரது காதல் வலையில் விழுந்த, மெட்ராஸ் கபே என்ற படத்தில் நடித்த, லீனா மரியபால் என்பவரும் 2013ல் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X