ஆப்கன் நிலவரம்: விவாதிக்க 26ல் அனைத்து கட்சி கூட்டம்

Updated : ஆக 23, 2021 | Added : ஆக 23, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி ;ஆப்கன் நிலவரம் குறித்து விவாதிக்க, வரும் 26ல் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து உள்ளது. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து, அங்குள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது.வலியுறுத்தல்ஆப்கனின் தற்போதைய நிலை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கேள்வி
ஆப்கன் நிலவரம், விவாதிக்க 26ல் அனைத்து கட்சி கூட்டம்

புதுடில்லி ;ஆப்கன் நிலவரம் குறித்து விவாதிக்க, வரும் 26ல் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து உள்ளது. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து, அங்குள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது.


வலியுறுத்தல்



ஆப்கனின் தற்போதைய நிலை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: 'ஆப்கனின் தற்போதைய நிலை மற்றும் இரு நாட்டு உறவுகளின் தாக்கங்கள் குறித்து அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டும்' என, வெளியுறவுத் துறையிடம்பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.இதன்படி, ஆப்கன் நிலவரம் குறித்த கூடுதல் விபரங்களை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி விரைவில் அறிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக காங்., - எம்.பி., ராகுல் வெளியிட்டுள்ள பதிவில், 'ஆப்கன் நிலவரம் குறித்து எதிர்க்கட்சியினருக்கு பிரதமரால் ஏன் விளக்கம் அளிக்க முடியவில்லை' என, கேள்வி எழுப்பி உள்ளார்.


அழைப்பு



இதையடுத்து ஆப்கன் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக, வரும் 26ல் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
25-ஆக-202100:07:41 IST Report Abuse
மதுரை விருமாண்டி ஹா, ஹா, ஹா.. விவசாயிங்க பிரச்சினைக்கு ஓடி ஒளிஞ்சங்க, வெளிநாட்டு கம்பெனியுன்ன் சேர்ந்து நாட்டை சட்டவிரோதமா வேவு பார்த்த விவகாரத்திலே ஓடி ஒளிஞ்சாங்க — இப்போ ஆப்கானிஸ்தான் வெவகாரத்தை பத்தி பேச அழைப்பாம்..
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
24-ஆக-202107:13:58 IST Report Abuse
Kasimani Baskaran இப்பொழுதும் சி ஏ ஏ கூடாது என்பார்களோ? சிந்திக்கும் திறனற்ற எதிர்க்கட்சி நாட்டுக்கே கேடு.
Rate this:
Cancel
24-ஆக-202107:02:06 IST Report Abuse
அப்புசாமி அதான் நேரு நாட்டைக் கெடுத்துட்டாரு. காங்கிரஸ் உதவாத ஊன்றுகோல்னெல்லாம் பேசுறீங்களே? அப்புறம் அவிங்களை எதுக்கு கூட்டத்துல சேத்துக்கிட்டு? அவிங்க பார்லிமெண்ட்டிலேயே ரகளை பண்ணாங்களே மறந்து போச்சா? மத்த எதிர்க்கட்சிகளும் அப்பிடித்தான். பேசாம உங்க கூட்டத்த கூட்டி பேசுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X