ஆப்கன் நிலவரம்: விவாதிக்க 26ல் அனைத்து கட்சி கூட்டம்| Dinamalar

ஆப்கன் நிலவரம்: விவாதிக்க 26ல் அனைத்து கட்சி கூட்டம்

Updated : ஆக 23, 2021 | Added : ஆக 23, 2021 | கருத்துகள் (3)
Share
புதுடில்லி ;ஆப்கன் நிலவரம் குறித்து விவாதிக்க, வரும் 26ல் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து உள்ளது. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து, அங்குள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது.வலியுறுத்தல்ஆப்கனின் தற்போதைய நிலை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கேள்வி
ஆப்கன் நிலவரம், விவாதிக்க 26ல் அனைத்து கட்சி கூட்டம்

புதுடில்லி ;ஆப்கன் நிலவரம் குறித்து விவாதிக்க, வரும் 26ல் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து உள்ளது. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து, அங்குள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது.


வலியுறுத்தல்



ஆப்கனின் தற்போதைய நிலை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: 'ஆப்கனின் தற்போதைய நிலை மற்றும் இரு நாட்டு உறவுகளின் தாக்கங்கள் குறித்து அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டும்' என, வெளியுறவுத் துறையிடம்பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.இதன்படி, ஆப்கன் நிலவரம் குறித்த கூடுதல் விபரங்களை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி விரைவில் அறிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக காங்., - எம்.பி., ராகுல் வெளியிட்டுள்ள பதிவில், 'ஆப்கன் நிலவரம் குறித்து எதிர்க்கட்சியினருக்கு பிரதமரால் ஏன் விளக்கம் அளிக்க முடியவில்லை' என, கேள்வி எழுப்பி உள்ளார்.


அழைப்பு



இதையடுத்து ஆப்கன் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக, வரும் 26ல் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X