பொது செய்தி

தமிழ்நாடு

பொதுமக்கள் எதிர்ப்பால் காஸ் தயாரிக்கும் மையம் மூடல்

Added : ஆக 23, 2021
Share
Advertisement
கோவை:பொதுமக்களின் எதிர்ப்பால், கோவை மாநகராட்சியில், மக்கும் குப்பையில் காஸ் தயாரிக்கும் மையத்தின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.கோவை, பாரதி பார்க், மாநகராட்சி பணிமனை வளாகத்தில், 2019, அக்டோபரில், ரூ.43 லட்சத்தில், மக்கும் குப்பையில் காஸ் தயாரித்து, மின்சாரமாக மாற்றி, தெருவிளக்குகளுக்கு பயன்படுத்தும் மையம் அமைக்கப்பட்டது. மொத்தம், 1,500 கிலோ மக்கும் குப்பை

கோவை:பொதுமக்களின் எதிர்ப்பால், கோவை மாநகராட்சியில், மக்கும் குப்பையில் காஸ் தயாரிக்கும் மையத்தின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.கோவை, பாரதி பார்க், மாநகராட்சி பணிமனை வளாகத்தில், 2019, அக்டோபரில், ரூ.43 லட்சத்தில், மக்கும் குப்பையில் காஸ் தயாரித்து, மின்சாரமாக மாற்றி, தெருவிளக்குகளுக்கு பயன்படுத்தும் மையம் அமைக்கப்பட்டது. மொத்தம், 1,500 கிலோ மக்கும் குப்பை கொட்டி, 15 கேவிஏ மின்சாரம் உற்பத்தி செய்யும் திறனுக்கு இயந்திரங்கள் பொருத்தப்பட்டன.முதல்கட்டமாக, பாரதி பார்க் வளாகத்தில், 40 எல்.இ.டி., விளக்குகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டது. மக்கும் குப்பையில் உரம் தயாரிக்கும் மையத்துக்கு விளக்கு பயன்பாட்டுக்கும் இணைப்பு கொடுக்கப்பட்டது. மின்னுற்பத்தி அதிகரிக்கும்போது, பாரதி பார்க் சுற்றுப்பகுதியில் உள்ள அனைத்து வீதிகளுக்கும் இணைப்பு வழங்க, மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர்.குப்பையை கையாள்வதால் துர்நாற்றம் வீசுவதாக, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அம்மையத்தின் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. கமிஷனர் ராஜகோபால் சமீபத்தில் ஆய்வு செய்தபோது, பொதுமக்களுக்கு பாதிப்பு வராத அளவுக்கு, இம்மையத்தை வேறிடத்துக்கு மாற்ற அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X