பொது செய்தி

தமிழ்நாடு

மேம்பால டிசைன்; தொழில்நுட்ப குழு ஆய்வு

Added : ஆக 23, 2021
Share
Advertisement
கோவை:கோவை - தடாகம் ரோட்டில், லாலி ரோடு சந்திப்பில் பாலம் கட்டுவதற்கு மாநில நெடுஞ்சாலைத்துறை தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.கோவையில் முக்கியமான சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க, பாலம் கட்டும் பணியை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொள்கின்றனர். உக்கடம் - ஆத்துப்பாலம், திருச்சி ரோடு, அவிநாசி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு என, பிரதான

கோவை:கோவை - தடாகம் ரோட்டில், லாலி ரோடு சந்திப்பில் பாலம் கட்டுவதற்கு மாநில நெடுஞ்சாலைத்துறை தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.கோவையில் முக்கியமான சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க, பாலம் கட்டும் பணியை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொள்கின்றனர். உக்கடம் - ஆத்துப்பாலம், திருச்சி ரோடு, அவிநாசி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு என, பிரதான ரோடுகளில் பாலம் கட்டும் பணி துரிதகதியில் நடந்து வருகிறது.இதில், மருதமலை ரோடு, தடாகம் ரோடு, காந்தி பார்க் ரோடு, கவுலிபிரவுன் ரோடுகளை லாலி ரோடு சந்திப்பு ஒருங்கிணைக்கிறது. காலை மற்றும் மாலை நேரங்களில், இந்த நான்கு ரோடுகளில் இருந்து வரும் வாகனங்கள், சிக்னலில் ஸ்தம்பிக்கின்றன. 'கிரீன்' சிக்னல் விழுந்து கடந்து செல்வதற்குள், மீண்டும் 'ரெட்' சிக்னல் விழுந்து விடுகிறது; அந்தளவுக்கு நெடுந்துாரத்துக்கு வாகனங்கள் காத்திருக்கின்றன.இதற்கு தீர்வு காண, லாலி ரோடு சந்திப்பில் உயர்மட்ட பாலம் கட்டுவதற்கு மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டு, 2019ல் மண் பரிசோதனை செய்தது. நான்கு வழித்தடங்களிலும் தினமும் பயணிக்கும் வாகனங்கள் கணக்கெடுக்கப்பட்டன.இதில், லாலி ரோட்டில் இருந்து, காந்தி பார்க் நோக்கி செல்வோரே அதிகமாக இருந்தனர். விசேஷ காலங்களில் மட்டுமே மருதமலை ரோட்டில், அதிக வாகனங்கள் சென்றன. அதனால், தடாகம் ரோடு - காந்திபார்க் ரோடு இணைக்கும் வகையில் பாலம் கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயாரித்து, ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.இதுதொடர்பாக, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'லாலி ரோடு சந்திப்பில் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ள பாலத்துக்கான வடிவமைப்பை, நெடுஞ்சாலைத்துறை தொழில்நுட்ப குழுவினர் மாற்றித்தர அறிவுறுத்தியுள்ளனர். 'டிசைன்' மாற்றப்பட்டு, ஒப்புதலுக்கு அனுப்பினோம். தொழில்நுட்ப குழுவினர், ஆய்வு செய்து வருகின்றனர்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X