தமிழ்நாடு

தியேட்டர்களில் படம் ரிலீஸ் எதிர்பார்த்து... காத்திருக்குது ஒரு கூட்டம்! பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும் பணி துரிதம்

Updated : ஆக 24, 2021 | Added : ஆக 23, 2021
Share
Advertisement
கோவை,:நண்பர்கள், குடும்பத்தினரோடு ஒரு சேர அமர்ந்து, பாப்கார்ன் கொறித்துக் கொண்டு, நுனி இருக்கையில் அமர்ந்து, விருப்பமான காட்சி வரும்போது, கோரஸாக 'சவுண்டு' விட்டு, தியேட்டர்களில் திரைப்படம் பார்க்கும் சுகமே அலாதியானது. நோய் தொற்று கட்டுக்குள் இருப்பதால், தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்த போதிலும், ரசிகர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக, நேற்று
 தியேட்டர்களில் படம் ரிலீஸ் எதிர்பார்த்து...  காத்திருக்குது ஒரு கூட்டம்! பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும் பணி துரிதம்

கோவை,:நண்பர்கள், குடும்பத்தினரோடு ஒரு சேர அமர்ந்து, பாப்கார்ன் கொறித்துக் கொண்டு, நுனி இருக்கையில் அமர்ந்து, விருப்பமான காட்சி வரும்போது, கோரஸாக 'சவுண்டு' விட்டு, தியேட்டர்களில் திரைப்படம் பார்க்கும் சுகமே அலாதியானது. நோய் தொற்று கட்டுக்குள் இருப்பதால், தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்த போதிலும், ரசிகர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக, நேற்று திரைப்படங்கள் ஒளிபரப்பவில்லை.

அதனால், திரைப்படம் ரிலீசாகும் நாளை எதிர்பார்த்து, ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.கொரோனா இரண்டாவது அலை காரணமாக, நான்கு மாதங்களாக மூடப்பட்டிருந்த தியேட்டர்கள், தமிழக அரசு அளித்த தளர்வுகளை தொடர்ந்து நேற்று திறக்கப்பட்டன. இருப்பினும், திரைப்படங்கள் ஒளிபரப்பவில்லை. பாதுகாப்பு ஏற்பாடாக, கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்துவது உள்ளிட்ட முன்னேற்பாடு வேலைகள் செய்யப்பட்டன,நுழைவாயில், இருக்கைகள், கழிப்பறை போன்ற பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டன. 50 சதவீத பார்வையாளர்கள் அமரும் வகையில், இருக்கைகளில், 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டது. பல மாதங்களாக மூடப்பட்டிருந்ததால், ஒலியும் ஒளியும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

வரும், 26 அல்லது, 27ம் தேதியில் இருந்து படங்களை திரையிட, தியேட்டர் உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.திரைக்கு வர, 40க்கும் மேற்பட்ட புதிய திரைப்படங்கள் காத்திருக்கின்றன. விஜய் சேதுபதி நடித்த மாமனிதன், கடைசி விவசாயி, லாபம், யாதும் ஊரே யாரும் கேளிர் போன்ற படங்கள் தயாராக உள்ளன. கங்கனா ரணாவத் நடித்துள்ள, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை கதையான தலைவி, காஜல் அகர்வால் நடித்த கருங்காப்பியம் என, பல திரைப்படங்கள் உள்ளன.

புதிய படங்கள் திரைக்கு வராத பட்சத்தில், ஹிந்தி படமான 'பெல்பாட்டம்', ஹாலிவுட் படமான, 'கோட்சில்லா Vs கிங்காங்', தமிழ் படமான 'பாரிஸ் ஜெயராஜ்' உள்ளிட்ட படங்கள் வெளியாக வாய்ப்புள்ளது.ஆனால், இடைப்பட்ட காலங்களில், ஓ.டி.டி., தளத்தில் சில படங்கள் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதனால், தொற்று காலத்தில், மீண்டும் தியேட்டர்களுக்கு வந்து, படங்களை பார்க்க, ரசிகர்கள் விரும்புவார்களா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழக திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்க முன்னாள் செயலாளர் பாலசுப்ரமணியம் கூறியதாவது:தியேட்டர்களை சுத்தம் செய்து, சானிடைசர் தெளித்து தயார்படுத்தி இருக்கிறோம்.

ரசிகர்கள் முகக்கவசம் அணியாமல் வந்தால், அனுமதி இல்லை. கோவையில், 40 தியேட்டர்கள் இருந்தன; இப்போது, 20 மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. இதில், எத்தனை செயல்படும் என, தெரியவில்லை. இனி, தியேட்டர் நடத்துவது கஷ்டம். ஒரு டிக்கெட், 100 ரூபாய்க்கு விற்கிறோம் என்றால், அதில், 30 ரூபாய் வரி, மீதி இருப்பதில், 60 சதவீதம் வினியோகஸ்தருக்கு செல்லும். தியேட்டர் உரிமையாளர்களுக்கு, 28 ரூபாயே கிடைக்கிறது. இதிலிருந்தே மின்சாரம், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்து தியேட்டரை நடத்த வேண்டும்.தொழிலை விட்டு விடக் கூடாது என, கவுரவத்துக்காக பலர் நடத்தி வருகின்றனர். மற்றபடி, முன்புபோல் இத்தொழிலில் லாபம் இல்லை. ஓ.டி.டி., தளத்தில் படங்கள் ரிலீஸ் செய்வதால், எங்களுக்கு பாதிப்பு இல்லை. அப்படங்களை தியேட்டரில் வெளியிட்டால், கலெக்சன் இருக்காது.இவ்வாறு, அவர் கூறினார்.

ஓ.டி.டி., தளங்களால், பெரிய அளவில் பாதிப்பு இல்லை. தமிழ் ராக்கர்ஸ், வி.சி.டி., ஆதிக்கம் இருந்த காலங்களில் கூட தியேட்டர்களுக்கு வருவோர் எண்ணிக்கை குறையவில்லை. தியேட்டர்களில் பெரிய திரையில் படம் பார்க்கும் அனுபவம் 'டிவி', மொபைல் போனில்களில் கிடைக்காது. தியேட்டர்களில் தங்களது படங்களை திரையிடவே நடிகர்கள் விரும்புகின்றனர்.-தினேஷ்குமார், தியேட்டர் உரிமையாளர்.

கொரோனா தொற்று பரவாமல் இருந்திருந்தால், ஓ.டி.டி., தளம் பற்றி மக்களுக்குத் தெரியாமல் போயிருக்கும். தொற்று காலத்துக்குபின், பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே அதிகமான ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருகின்றனர். சின்ன பட்ஜெட் படங்களை, ஓ.டி.டி.,யில் பார்க்கின்றனர்.-ரூபன் பிரபாகர், தியேட்டர் உரிமையாளர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X