சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புகாரை கண்டுகொள்ளாத போலீசார் விரக்தியில் பெண் தற்கொலை முயற்சி

Added : ஆக 23, 2021
Share
Advertisement
ஆவடி : 'போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை' எனக்கூறி, அம்பத்துார் காவல் மாவட்ட துணை கமிஷனர் அலுவலகத்தில், பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.திருமுல்லைவாயில், மூர்த்திநகரைச் சேர்ந்தவர் கவிதா, 25. இவர் அம்பத்துார், புதுார் பகுதியிலுள்ள அழகு நிலையத்தில் வேலை செய்த போது, அதன் உரிமையாளரான எல்லப்பன் என்பவரை காதலித்து, 2019 டிச., 23ல் பதிவுத் திருமணம் செய்து
 புகாரை கண்டுகொள்ளாத போலீசார் விரக்தியில் பெண் தற்கொலை முயற்சி

ஆவடி : 'போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை' எனக்கூறி, அம்பத்துார் காவல் மாவட்ட துணை கமிஷனர் அலுவலகத்தில், பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருமுல்லைவாயில், மூர்த்திநகரைச் சேர்ந்தவர் கவிதா, 25. இவர் அம்பத்துார், புதுார் பகுதியிலுள்ள அழகு நிலையத்தில் வேலை செய்த போது, அதன் உரிமையாளரான எல்லப்பன் என்பவரை காதலித்து, 2019 டிச., 23ல் பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.
மிரட்டல்
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், புது வீடு கட்ட வேண்டும் எனக்கூறி எல்லப்பன், கவிதாவை அவரது தாய் வீட்டில் விட்டுச் சென்று உள்ளார். தொடர்ந்து, கடந்த ஒரு மாதமாக கவிதாவிடம் பேசுவதை எல்லப்பன் நிறுத்தினார். எல்லப்பனுக்கும், அழகு நிலையத்தில் வேலை செய்யும் இன்னோரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக அறிந்து, அவரிடம் நேரில் சென்று கவிதா கேட்டுஉள்ளார்.அப்போது எல்லப்பன், கவிதாவை மிரட்டி, அவருடன் வாழ முடியாது எனக்கூறி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

அழகு நிலையம் அம்பத்துாரில் இருந்ததால், அம்பத்துார் காவல் நிலையத்திலும், தான் வசிக்கும் வீடு திருமுல்லைவாயிலில் இருப்பதால், திருமுல்லைவாயில் காவல் நிலையத்திலும் கவிதா புகாரளித்தார்.பரபரப்புஇரு காவல் நிலைய போலீசாரும் நடவடிக்கை எடுக்காததால், நேற்று முன்தினம் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கச் சென்றுள்ளார். ஆனால் அங்கும், காவல் ஆய்வாளர் விடுப்பில் இருப்பதை காரணம் காட்டி, திருப்பி அனுப்பிஉள்ளனர்.

இதனால் மனமுடைந்த கவிதா, நேற்று மதியம் ஆவடியில் உள்ள அம்பத்துார் காவல் மாவட்ட துணை கமிஷனர் அலுவலகத்திற்குச் சென்று, தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.அங்கிருந்த போலீசார் அவரை தடுத்து, அவரிடம் புகார் மனுவை பெற்று, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து அனுப்பினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X