அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழர்களுக்கு முக்கியத்துவம் தருகிறார் பிரதமர் மோடி

Updated : ஆக 23, 2021 | Added : ஆக 23, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
சென்னை :'தொடர்ந்து தமிழர்களை, சிறப்பான பதவிகளில் நியமித்ததன் வாயிலாக, தமிழகத்திற்கு தான் வழங்கும் முக்கியத்துவத்தை மீண்டும் மீண்டும், பிரதமர் மோடி நிரூபித்துக் கொண்டிருக்கிறார்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில், சமூகத்திற்காகவும், கட்சிக்காகவும், உண்மையாகவும், நேர்மையாகவும் உழைப்பவர்களை எல்லாம், பல துறைகளில் அடையாளம்
தமிழர்கள். முக்கியத்துவம்,பிரதமர் மோடி

சென்னை :'தொடர்ந்து தமிழர்களை, சிறப்பான பதவிகளில் நியமித்ததன் வாயிலாக, தமிழகத்திற்கு தான் வழங்கும் முக்கியத்துவத்தை மீண்டும் மீண்டும், பிரதமர் மோடி நிரூபித்துக் கொண்டிருக்கிறார்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில், சமூகத்திற்காகவும், கட்சிக்காகவும், உண்மையாகவும், நேர்மையாகவும் உழைப்பவர்களை எல்லாம், பல துறைகளில் அடையாளம் கண்டு பதவி கொடுத்து, மரியாதை செய்யும் ஒரே கட்சி பா.ஜ., தான்.மேகாலயா மாநில முன்னாள் கவர்னர் சண்முகநாதன், கேரள முன்னாள் கவர்னர் சதாசிவம், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை, மத்திய நிதி அமைச்சர்
நிர்மலா சீதாராமன், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

மத்திய கப்பல் போக்குவரத்து துறை முன்னாள் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் முருகன் வரிசையில், தற்போது, மணிப்பூர் கவர்னராக நியமிக்கப்பட்டு இல.கணேசன் சிறப்பிக்கப்படுகிறார்.தொடர்ந்து, தமிழர்களை சிறப்பான பதவிகளில் நியமித்ததன் வாயிலாக, தமிழகத்திற்கு தான் வழங்கும் முக்கியத்துவத்தை மீண்டும் மீண்டும், பிரதமர் மோடி நிரூபித்துக் கொண்டுஇருக்கிறார். ஓட்டுக்காக பதவிகளை வழங்காமல், நாட்டுக்காக உழைப்பவர்களை எல்லாம் தேடிப்பிடித்து, நல்ல பதவி வழங்கும் மோடியின் நல்லாட்சி, ஒரு புதிய முன் உதாரணத்தை படைத்துக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.


அண்ணாமலை சுற்றுப்பயணம் மாணவர்களை சந்திக்கிறார்



தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தலைமையில், அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டம், சென்னை, தி.நகரில் உள்ள, கமலாலயத்தில் நேற்று நடந்தது. அதுபற்றி மாவட்ட தலைவர் ஒருவர் கூறியதாவது:ஒவ்வொரு மாவட்டத்திலும், கட்சி உத்தரவிடக் கூடிய பணிகளை சரிவர செய்து, அதன் விபரங்களை, தலைமைக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டது.
தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளும், தலா 30 சதவீத ஓட்டுகளை வைத்துள்ளன. அதனால், அக்கட்சிகள் தேர்தல் சமயத்தில் மட்டும் தீவிர தேர்தல் பணியாற்றி, கூடுதலாக 3 - 5 சதவீத ஓட்டுகளை பெற்றால், ஆட்சியை பிடித்து விடலாம்.பா.ஜ.,வுக்கு குறைந்த சதவீத
ஓட்டுகளே உள்ளன. எனவே, அடுத்த சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள, தற்போதில் இருந்தே ஒவ்வொரு தொண்டரும், நிர்வாகியும் கடுமையாக உழைத்து, கட்சியை வளர்க்க வேண்டும்.

வரும் சட்டசபை தேர்தலில் 150 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெறும் வகையில் இலக்கை நிர்ணயித்து, கட்சி பணியாற்ற வேண்டும் என, தெரிவிக்கப்பட்டது. செப்., முதல் மாவட்ட வாரியாக, அண்ணாமலை சுற்றுப்பயணம் செய்கிறார். செப்., 1ம் தேதி தென்காசி, 2ல், துாத்துக்குடி தெற்கு, 3ல் விருதுநகர், 6ல் தர்மபுரி செல்கிறார். இறுதியாக, 29ம் தேதி கோவை தெற்கு தொகுதிக்கு செல்கிறார்.

சுற்றுப் பயணத்தின் போது, ஒவ்வொரு மாவட்டத்திலும், கல்லுாரிமாணவர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதற்காக, கல்லுாரி மாணவர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில், ஒரு ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு, மாவட்ட
தலைவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.அதனுடன், கட்சி நிர்வாகிகள் சந்திப்பு, மூத்த தொண்டர்களை கவுரவிப்பது, 25 உறுப்பினர்கள் உள்ள 'பூத்'திற்கு நேரில் செல்வது போன்ற நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யுமாறு, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. உள்ளாட்சி தேர்தலை, எந்த நேரத்தில் அறிவித்தாலும், எதிர்கொள்ளும் வகையில் தயாராக இருக்கும்படியும் கூறப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
25-ஆக-202112:29:01 IST Report Abuse
r.sundaram கோவிலுக்குள் யாரு வேண்டுமானாலும் போகலாம், சாமி கும்பிடலாம். ஆனால் கிறிஸ்தவத்தில் ஒருவரின் சர்ச்க்குள் அடுத்தவர் போக முடியாதே, அங்குபோய் தொழக்கூட முடியாதே. அதேமாதிரி ஒருவரின் மசூதிக்குள் அடுத்தவருக்கு போக முடியாது, தொழுகை நடத்த முடியாது. அனால் ஹிந்து சமயத்தில் அவ்வாறு இல்லை. வைணவக்கோவிலுக்குள் சைவர்கள் செல்ல முடியும், அதே போல் சைவர்கள் கோவிலுக்குள் வைஷ்னவர்கள் செல்ல முடியும்.
Rate this:
Cancel
ஜெயந்தன் - Chennai,இந்தியா
24-ஆக-202113:48:41 IST Report Abuse
ஜெயந்தன் ஆனால்..தமிழ்நாடு மக்கள் இன்று பிஜேபியின் கேடி ராகவன் வீடியோவுக்கு தான் முக்கியத்துவம் தந்து கொண்டிருக்கிறாக்ர்கள்..
Rate this:
Cancel
24-ஆக-202113:02:07 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் தற்போது வெளியிட்டுள்ள திட்டத்தின் படி எந்தத் துறையில் எவ்வளவு மதிப்பிலான சொத்துகளை அடுத்த 4 வருடத்தில் பணமாக்க மத்திய அரசு தேர்வு செய்துள்ளது என்பதை இப்போது பார்ப்போம். சாலை - 1,60,200 கோடி ரூபாய் / ரயில்வே - 1,52,496 கோடி ரூபாய் / மின்சாரப் பரிமாற்றம் - 45,200 கோடி ரூபாய் / மின்சார உற்பத்தி - 39,832 கோடி ரூபாய்/ இயற்கை எரிவாயு பைப்லைன் - 24,462 கோடி ரூபாய் / பிராடெக்ட் பைப்லைன் - 22,504 கோடி ரூபாய் / டெலிகாம் - 35,100 கோடி ரூபாய் / கிடங்கு - 28,900 கோடி ரூபாய் / சுரங்கம் - 28,747 கோடி ரூபாய் / விமானப் போக்குவரத்து - 20,782 கோடி ரூபாய்/ துறைமுகம் - 12,828 கோடி ரூபாய் / ஸ்டேடியம் - 11,450 கோடி ரூபாய் / நகர ரியல் எஸ்டேட் - 15,000 கோடி ரூபாய் வாத்து இது எல்லாம் என்ன ஏதாவது தெரியுமா இல்லை இதுவும் எங்கள் நன்மைக்கா இல்லை உங்கள் கையால் ஆகாத ஆளுமைக்கா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X