தொடரும் சாரல் மழை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொடரும் சாரல் மழை

Added : ஆக 23, 2021
Share
தொண்டாமுத்துார்:தொண்டாமுத்துார் வட்டாரத்தில், தொடர்ந்து சாரல் மழை பெய்வதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தொண்டாமுத்துார் வட்டாரத்தில், 25,555 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. இப்பகுதியில், சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள், தென்னை, வாழை உள்ளிட்டவைகள் முக்கிய பயிராக பயிரிடப்படுகின்றன.பூண்டி, ஆலாந்துறை, நரசீபுரம், தொண்டாமுத்துார், வேடபட்டி, மருதமலை

தொண்டாமுத்துார்:தொண்டாமுத்துார் வட்டாரத்தில், தொடர்ந்து சாரல் மழை பெய்வதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தொண்டாமுத்துார் வட்டாரத்தில், 25,555 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. இப்பகுதியில், சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள், தென்னை, வாழை உள்ளிட்டவைகள் முக்கிய பயிராக பயிரிடப்படுகின்றன.பூண்டி, ஆலாந்துறை, நரசீபுரம், தொண்டாமுத்துார், வேடபட்டி, மருதமலை உள்ளிட்ட பகுதிகளில், இரு நாட்களாக தொடர்ந்து, சாரல் மழை பெய்து வருகிறது. இவ்வட்டாரத்தில், தற்போது, தக்காளி, வெண்டை, முள்ளங்கி நடவு செய்துள்ளனர். தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X