அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கோடநாடு விவகாரத்தை எழுப்பியது அ.தி.மு.க., தான்'

Added : ஆக 24, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை-''கோடநாடு விவகாரத்தை, அ.தி.மு.க.,வினர் தான் சட்டசபையில் எழுப்பினர். வழக்கு விசாரணையில், அரசியல் நோக்கமோ, பழி வாங்கலோ கிடையாது,'' என, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.கலைவாணர் அரங்கில், அவர் அளித்த பேட்டி:தேவநேயப் பாவாணர் பேத்தி வறுமையில் உழல்வதாக, சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. அவரை உடனடியாக அழைத்து உதவும்படி, முதல்வர் உத்தரவிட்டார்.

சென்னை-''கோடநாடு விவகாரத்தை, அ.தி.மு.க.,வினர் தான் சட்டசபையில் எழுப்பினர். வழக்கு விசாரணையில், அரசியல் நோக்கமோ, பழி வாங்கலோ கிடையாது,'' என, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

கலைவாணர் அரங்கில், அவர் அளித்த பேட்டி:தேவநேயப் பாவாணர் பேத்தி வறுமையில் உழல்வதாக, சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. அவரை உடனடியாக அழைத்து உதவும்படி, முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி, அவரை அழைத்து, உரிய உதவிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழறிஞர்கள் குடும்பம் வறுமை நிலைக்கு வரக்கூடாது என்பதில், முதல்வர் உறுதியாக உள்ளார். கோடநாடு விவகாரத்தில், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் அளித்த பேட்டி, முரண்பாடாக உள்ளது. சட்டசபையில், பிரச்னையை எழுப்புவது தவறு என்கிறார். அதேநேரம், சட்டசபையில் எழுப்புவது, எம்.எல்.ஏ.,க் கள் உரிமை என்கிறார்.கோடநாடு விவகாரத்தை முதலில் சட்டசபைக்கு கொண்டு வந்ததுஅ.தி.மு.க., தான். சட்டசபையில் விவாதிக்க முடியாத பொருளை, ஏன் சட்டசபையில் எழுப்பினர்.கோடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை நடந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தன் வாழ்நாளில் உகந்த இடமாக கருதிய இடம் அது. கோடநாடு பங்களாவில் இருந்து, அரசு பணிகளை கவனித்துள்ளார்.

அப்படிப்பட்ட இடத்தில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை வருகிறது.ஜெயகுமாருக்கு அவசரகாரியமாக இல்லாமல் இருக்கலாம்; அ.தி.மு.க., அடிமட்ட தொண்டர்கள் என்ன நடந்தது என, கேட்கின்றனர். வழக்கு நடக்கிறது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்,நீதிமன்றத்தில் ஒரு விஷயத்தை கூறுகிறார். நீதிமன்றம் பதிவு செய்கிறது. அரசு மறு விசாரணைக்கு செல்கிறது.

ஜெயகுமார் பதற்றத்தில், தான் கூறியதை மாற்றி மாற்றி கூறுகிறார். முதல்வர், சட்டம் குறித்து பேசக்கூடாது என்கிறார். சட்டம் - ஒழுங்கை காப்பாற்றும் பொறுப்பில் இருப்பவரை, இவ்வாறு கூறுவது வேடிக்கையானது. கோடநாடு விவகாரவிசாரணையில், எந்த அரசியல் நோக்கமோ; பழிவாங்கலோ கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nanban - Kajang,மலேஷியா
24-ஆக-202109:18:44 IST Report Abuse
Nanban ஆக, தி மு க அரசு தா. கிருட்டிணன் கொலை , அண்ணா நகர் ரமேஷ் கொலை , சாதிக் பாட்ஸா கொலை, ராமஜெயம் கொலை என அனைத்து கொலைகளையும் விசாரித்து நடவடிக்கை எடுக்கும். என நம்பலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X