ராஜ்யசபா இடைத்தேர்தல் இன்று மனு தாக்கல் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராஜ்யசபா இடைத்தேர்தல் இன்று மனு தாக்கல் துவக்கம்

Added : ஆக 24, 2021
Share
சென்னை-தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று ராஜ்யசபா பதவிகளில் ஒரு பதவிக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்குகிறது. தமிழகத்தில் இருந்து, அ.தி.மு.க., சார்பில், ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்ட முகமது ஜான், மார்ச், 23ல் மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த எம்.பி., பதவி காலியானது. பதவி காலம் நிறைவடைய நான்கு

சென்னை-தமிழகத்தில் காலியாக உள்ள மூன்று ராஜ்யசபா பதவிகளில் ஒரு பதவிக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று துவங்குகிறது.

தமிழகத்தில் இருந்து, அ.தி.மு.க., சார்பில், ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்ட முகமது ஜான், மார்ச், 23ல் மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து, அவர் வகித்து வந்த எம்.பி., பதவி காலியானது. பதவி காலம் நிறைவடைய நான்கு ஆண்டுகள் உள்ளன. சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,க்கள், முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் வெற்றி பெற்றனர். ஏதேனும் ஒரு பதவியில் மட்டும் இருக்க முடியும் என்பதால், இருவரும் தங்கள் எம்.பி., பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களில், வைத்திலிங்கம் பதவிக்காலம் முடிய ஓராண்டு, முனுசாமி பதவி காலம் முடிய, ஐந்து ஆண்டுகள் இருந்தன.

தற்போது, முகமது ஜான் வகித்து வந்த பதவிக்கு மட்டும், தேர்தல் கமிஷன் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது. இப்பதவிக்கு, இன்று வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. வரும், 31ம் தேதி மனு தாக்கலுக்கு கடைசி நாள். தேர்தல் நடத்தும் அலுவலராக, சட்டசபை செயலரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக, சட்டசபை செயலக கூடுதல் செயலரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தலைமை செயலகத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தில் வேலை நாட்களில் காலை 11:00 முதல் மாலை 3:00 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.இப்பதவிக்கு, தி.மு.க., சார்பில், அப்துல்லா என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர், ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X