எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

24 மணி நேரமும் தடுப்பூசி போடும் திட்டம் 55 அரசு மருத்துவமனைகளில் துவக்கம்

Updated : ஆக 24, 2021 | Added : ஆக 24, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
''தமிழகத்தில் உள்ள 55 அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது'' என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னையில் அவர் கூறியதாவது: அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி அரசின் வற்புறுத்தலால் தனியார் மருத்துவமனைகளிலும் 'ஆக்சிஜன் ஜெனரேட்டர்'கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு
24 மணி நேரம் தடுப்பூசி ,திட்டம் 55 அரசு மருத்துவமனைகள், துவக்கம்

''தமிழகத்தில் உள்ள 55 அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது'' என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
சென்னையில் அவர் கூறியதாவது: அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி அரசின் வற்புறுத்தலால் தனியார் மருத்துவமனைகளிலும் 'ஆக்சிஜன் ஜெனரேட்டர்'கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்தியாவிலேயே முதன் முறையாக 36 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், 19 மாவட்ட தலைமை மருத்துவ மனைகள் என 55 அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.இந்த மருத்துவமனைகளில் சென்னையில் இருந்து செல்பவர்கள் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் என அனைத்து தரப்பினரும் எந்த நேரத்திலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

கொரோனா மூன்றாம் அலை வந்தால் குழந்தைகளை பாதிக்கும் என்பதால் தமிழகம் முழுதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மையம் துவக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 'கோவிஷீல்டு' தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை. அதே வேளையில் 'கோவாக்சின்' தடுப்பூசி நான்கு லட்சம் தேவைப்படுகிறது. கூடுதலாக கோவாக்சின் தடுப்பூசிகளை தரும்படி மத்தியஅரசிடம் பேசிவருகிறோம்.

மக்கள் நல்வாழ்வு துறையில் காலி பணியிடங்கள் உள்ளது என்பதை விட 30 ஆயிரம் கூடுதல் பணியிடங்கள் உள்ளன. அப்பணியிடங்களை முறைப்படுத்துவது தான் முதல் வேலை. அதன்பின் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
24-ஆக-202109:07:23 IST Report Abuse
RajanRajan 55 மருத்துவ மனைகளின் பட்டியலை வெளியிடுங்கப்பா. அப்போ தானே பொதுமக்கள் அவர்களின் வசதிகேற்ப வந்து ஊசி போட்டுக்குவாங்கள். சும்மா விளம்பரம் தேடாதீங்க. உருப்படியா பணியாற்றுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X