அரசியல் செய்தி

தமிழ்நாடு

நிதி அமைச்சர் தியாகராஜன் பேச்சு; மன்னிப்பு கேட்டார் முதல்வர்!

Added : ஆக 24, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை-சட்டசபையில், நிதி அமைச்சர் தியாகராஜன், வார்த்தையை தவறாக பயன்படுத்தியதற்கு, முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்டார்.சட்டசபையில், நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. இதில், அ.தி.மு.க., சார்பில், முனுசாமி பேசுகை யில், ''தி.மு.க., தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய்; டீசல் 4 ரூபாய் குறைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால்,

சென்னை-சட்டசபையில், நிதி அமைச்சர் தியாகராஜன், வார்த்தையை தவறாக பயன்படுத்தியதற்கு, முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்டார்.

சட்டசபையில், நீர்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. இதில், அ.தி.மு.க., சார்பில், முனுசாமி பேசுகை யில், ''தி.மு.க., தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய்; டீசல் 4 ரூபாய் குறைக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. ஆனால், பெட்ரோல் விலை ௩ ரூபாய் தான் குறைக்கப்பட்டது,'' என்றார்.

வருத்தம்

உடன், குறுக்கிட்ட நிதி அமைச்சர் தியாகராஜன், ''2011 முதல் 2021 வரை அ.தி.மு.க., ஆட்சியில் ஐந்து முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. ஒருமுறை கூட குறைக்கப்படவில்லை,'' என்றார். தொடர்ந்து பேசுகையில், ஒரு வார்த்தையை அவர் பயன்படுத்தினார். அந்த வார்த்தையை, சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என, அ.தி.மு.க.,வினர் கேட்டனர். அப்போது எழுந்த எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, நிதி அமைச்சர்தியாகராஜனை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் வகையில், ஒரு கருத்தை கூறினார்.

மீண்டும் எழுந்த தியாகராஜன், ''தனிநபரை பற்றி நான் கூறவில்லை. திசைதிருப்பும் வகையில், எதிர்க்கட்சி தலைவர் பேசுகிறார். யாரையும் நான் அவமதிக்கவில்லை,'' என்றார்.அப்போது எழுந்த முதல்வர் ஸ்டாலின், ''நிதி அமைச்சர் விளக்கம் சொல்லும் போது, 'அதை சொல்வதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது' என கேட்டிருக்க வேண்டும். ''அவர் வார்த்தையை மாற்றி கூறியதற்கு, உள்ளபடியே வருத்தப்படுகிறேன். அந்த வார்த்தையை சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்,'' என்றார்.

நீக்கம்மீண்டும்

எழுந்த நிதி அமைச்சர் தியாகராஜன், ''எதிர்க்கட்சி தலைவர் என்னை பற்றி பேசலாமா,'' எனகேட்டார். இதையடுத்து, நிதி அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பயன்படுத்திய சர்ச்சைக்குரிய வார்த்தைகளை சபை குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். தவறுஇதன்பின், முனுசாமி பேசியதாவது:முதல்வர் மிக பெருந்தன்மையுடன், நிதி அமைச்சர் கூறிய கருத்துகளை, வார்த்தைகளை எடுத்துவிட வேண்டும் என கூறினார். அதற்கு முதல்வருக்கு நன்றி. நன்றி சொல்வது என்பது நாகரிகம்.

நிதித்துறை அமைச்சர் ஏற்கனவே, சம்பத்குமார் குறித்து ஒரு கருத்தை தெரிவித்தார். அவரது மனசாட்சி உறுத்தியதால், பெருந்தன்மையுடன் மன்னிப்பு கேட்டார். அவருக்கு பக்குவம் இருக்கிறது. சில நேரங்களில் அவர் சொல்லும் வார்த்தைகள் தவறாகி விடுகின்றன.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nanban - Kajang,மலேஷியா
24-ஆக-202109:22:23 IST Report Abuse
Nanban இது தி மு க வின் கடைசி ஐந்தாண்டு கால ஆட்சி எவ்வளவு பேச முடியுமோ அவ்வளவு பேசுங்கள்,
Rate this:
Cancel
Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா
24-ஆக-202109:00:22 IST Report Abuse
Srinivasan Rangarajan வெளிநாட்டில் கல்லூரியில் MBA முடித்து விட்டு வரும் மகன் தந்தையின் நிறுவனத்துக்கு தலைமை பொறுப்பை ஏற்ற உடன் அங்கு காலம் காலமாக நடந்து வரும் நடைமுறை எல்லாவற்றையும் ஒரேடியாக நீக்கி கம்பெனி- ஐ திவால் நிலைமைக்கு கொண்டு செல்வது போன்று நம் நிதி அமைச்சரின் செயல்பாடுகள் உள்ளன...
Rate this:
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
24-ஆக-202108:13:25 IST Report Abuse
Milirvan ஹி.. ஹி.. தோழமை சுட்டிட்டாருடோய்.. கவித.. கவுத..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X