கொடையில் சுற்றுலா தலங்கள் திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'கொடை'யில் சுற்றுலா தலங்கள் திறப்பு

Added : ஆக 24, 2021
Share
கொடைக்கானல்-கொடைக்கானலில் நான்கு மாத இடைவெளிக்கு பின் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டன.கொரோனா 2 ம் அலையால் ஏப்.,9 ம் தேதி இங்குள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பும் நிலையில் நேற்று கொடைக்கானலில் பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா திறக்கப்பட்டன. ஏரியில் படகு சவாரியும் அனுமதிக்கப்பட்டது. நகராட்சி கட்டுப்பாட்டில்

கொடைக்கானல்-கொடைக்கானலில் நான்கு மாத இடைவெளிக்கு பின் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டன.

கொரோனா 2 ம் அலையால் ஏப்.,9 ம் தேதி இங்குள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பும் நிலையில் நேற்று கொடைக்கானலில் பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா திறக்கப்பட்டன. ஏரியில் படகு சவாரியும் அனுமதிக்கப்பட்டது. நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள கோக்கர்ஸ்வாக், பசுமை பள்ளதாக்கு ஆகியவற்றிலும் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

இருப்பினும் காலை முதல் குறைந்தளவிலான பயணிகளே வந்திருந்தனர். மதியத்திற்கு பின் கொட்டித் தீர்த்த மழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பல பயணிகள் விடுதிகளில் முடங்கினர். சுற்றுலா வளர்ச்சி கழக படகு குழாமில் பயணிகளுக்கு பூங்கொத்து மற்றும் இனிப்பு கொடுத்து வரவேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X