பொது செய்தி

தமிழ்நாடு

மாநிலங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து துவக்கம்

Added : ஆக 24, 2021
Share
Advertisement
ஓசூர்-தமிழகம் - கர்நாடகா இடையே 117 நாட்களுக்கு பின், நேற்று மீண்டும் பஸ் போக்குவரத்து துவங்கியது.கொரோனா இரண்டாவது அலையால் ஏப்., 28 முதல், கர்நாடகா - தமிழகம் இடையே இரு மாநில அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஜூன் 28 முதல், தமிழகத்தில், பொது போக்குவரத்துக்கு அரசு அனுமதி வழங்கினாலும், மாநிலங்களுக்கு இடையே தடை தொடர்ந்தது. இந்நிலையில் மாநிலங்களுக்கு இடையே,
 மாநிலங்களுக்கு இடையே  பஸ் போக்குவரத்து துவக்கம்

ஓசூர்-தமிழகம் - கர்நாடகா இடையே 117 நாட்களுக்கு பின், நேற்று மீண்டும் பஸ் போக்குவரத்து துவங்கியது.

கொரோனா இரண்டாவது அலையால் ஏப்., 28 முதல், கர்நாடகா - தமிழகம் இடையே இரு மாநில அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஜூன் 28 முதல், தமிழகத்தில், பொது போக்குவரத்துக்கு அரசு அனுமதி வழங்கினாலும், மாநிலங்களுக்கு இடையே தடை தொடர்ந்தது. இந்நிலையில் மாநிலங்களுக்கு இடையே, நேற்று முதல் பஸ் போக்குவரத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது.

இதனால், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், தமிழக எல்லையான ஓசூர் வழியாக கர்நாடகாவுக்கு 250க்கும் மேற்பட்ட தமிழக அரசு பஸ்கள் மற்றும் 25க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. அதேபோல், 80க்கும் மேற்பட்ட கர்நாடக மாநில அரசு பஸ்கள், ஓசூர் மற்றும் இதர பகுதிகளுக்கு வந்து சென்றன. 117 நாட்களுக்கு பின், இரு மாநிலங்களுக்கு இடையே பஸ் போக்குவரத்து துவங்கியதால் பயணியர், தொழிலாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

ஆந்திராவுக்கு பஸ்நேற்று முதல், கிருஷ்ணகிரி வழியாக பெங்களூரு, திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்து துவங்கியது. நான்கு மாதங்களுக்கு பின், வேலுாரில் இருந்து ஆந்திர மாநிலம், சித்துார், திருப்பதி, திருமலை, விஜயவாடா, ஐதராபாத், கர்நாடக மாநிலம் பெங்களூரு, கே.ஜி.எப்., கோலாருக்கும் பஸ்கள் இயங்கின. தமிழகம் - கர்நாடகா இடையே பஸ் போக்குவரத்து துவங்கியுள்ளதால், தமிழக எல்லையான ஓசூர் சோதனை சாவடியில் நேற்று முதல், இ - பதிவு முறையை அதிகாரிகள் கைவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X