பொது செய்தி

தமிழ்நாடு

தலைமை ஆசிரியர்களுடன் சி.இ.ஓ., ஆலோசனை

Added : ஆக 24, 2021
Share
Advertisement
சென்னை : பள்ளிகளை திறப்பதற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து, தலைமை ஆசிரியர்களுடன், முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் ஆலோசனை நடத்தினார்.கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படுகின்றன. செப்., 1 முதல், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து, சென்னை மாவட்ட

சென்னை : பள்ளிகளை திறப்பதற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து, தலைமை ஆசிரியர்களுடன், முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் ஆலோசனை நடத்தினார்.

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படுகின்றன. செப்., 1 முதல், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் நேற்று, ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

சென்னையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடந்த கூட்டத்தில், மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.வட்டார மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளும் பங்கேற்று, தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். ஒரு வாரத்துக்குள் அனைத்து பள்ளிகளையும் துாய்மை செய்து, 'சானிடைசர்' பயன்படுத்தி கிருமி நீக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X