கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'மாஜி' சிறப்பு டி.ஜி.பி.,வழக்கு; விழுப்புரம் கோர்ட் ஒத்திவைப்பு

Added : ஆக 24, 2021
Share
Advertisement
விழுப்புரம்-தமிழக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர், கடந்த பிப்ரவரி மாதம் உள்துறை செயலர் பிரபாகர் மற்றும் முன்னாள் டி.ஜி.பி., திரிபாதி ஆகியோரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, சிறப்பு டி.ஜி.பி., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.இது தொடர்பாக, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மீதும், பெண் ஐ.பி.எஸ்., அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த,

விழுப்புரம்-தமிழக முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை கொடுத்ததாக, பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர், கடந்த பிப்ரவரி மாதம் உள்துறை செயலர் பிரபாகர் மற்றும் முன்னாள் டி.ஜி.பி., திரிபாதி ஆகியோரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து, சிறப்பு டி.ஜி.பி., 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.இது தொடர்பாக, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மீதும், பெண் ஐ.பி.எஸ்., அதிகாரியை மிரட்டி கார் சாவியை பறித்த, செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி., கண்ணன் மீதும், விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிந்தனர்.இந்த வழக்கு விசாரணை, விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த விசாரணைக்கு, முன்னாள் எஸ்.பி., கண்ணன் ஆஜரானார்.

இவர், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரியும், வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்குமாறும் மனு தாக்கல் செய்துள்ளார்.இதேபோன்று முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இந்த வழக்கு விழுப்புரம் நீதிமன்ற அதிகார வரம்பிற்குள் வராது. எனவே, இவ்வழக்கை விழுப்புரம் நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது' என, மனுதாக்கல் செய்து உள்ளார்.இதையடுத்து, வழக்கு விசாரணையை செப்டம்பர் 2ம் தேதிக்கு ஒத்தி வைத்து, நீதிபதி கோபிநாதன் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X