கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அகதிகள் சட்டவிரோத குடியேறிகள் ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்

Added : ஆக 24, 2021
Share
Advertisement
மதுரை,-'இலங்கை அகதிகள், சட்டவிரோதமாக குடியேறியவர்கள்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.திருச்சி, கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த உலகநாதன், ஜெகதீஸ்வரன் உட்பட 65 பேர் ஏற்கனவே தாக்கல் செய்த மனு:ஆங்கிலேயர் ஆட்சியின்போது, எங்கள் மூதாதையர் பிழைப்பிற்காக இலங்கை சென்றனர். அங்கு, 1983ல் இனக்கலவரம் ஏற்பட்டதால், தாயகமான தமிழகம்

மதுரை,-'இலங்கை அகதிகள், சட்டவிரோதமாக குடியேறியவர்கள்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

திருச்சி, கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த உலகநாதன், ஜெகதீஸ்வரன் உட்பட 65 பேர் ஏற்கனவே தாக்கல் செய்த மனு:ஆங்கிலேயர் ஆட்சியின்போது, எங்கள் மூதாதையர் பிழைப்பிற்காக இலங்கை சென்றனர். அங்கு, 1983ல் இனக்கலவரம் ஏற்பட்டதால், தாயகமான தமிழகம் வந்தோம். எங்களை அகதிகளாக கருதாமல், தாயகம் திரும்பியவர்களாக கருதி, இந்திய குடியுரிமை வழங்க மத்திய -- மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டனர். கடந்த 2019ல், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்களின் பிரச்னையை மனிதாபிமான முறையில் அணுக வேண்டும். குடியுரிமை வழங்குவது தொடர்பாக, மத்திய அரசுக்கு இந்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது.

இந்திய குடியுரிமை கோரி, புதிதாக சம்பந்தப்பட்ட கலெக்டர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள், விண்ணப்பங்களை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். அவற்றின் மீது மத்திய அரசு தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.இதை எதிர்த்து, மத்திய வெளியுறவு மற்றும் உள்துறை செயலர்கள் மேல்முறையீடு செய்தனர்.

தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி எம்.துரைசுவாமி அமர்வு நேற்று விசாரித்தது. மத்திய அரசுத் தரப்பு, 'மனுதாரர்கள், சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியவர்கள். உணர்ச்சியின் உந்துதலில், தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது ஏற்புடையதல்ல' என தெரிவித்தது.இவ்வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட இலங்கை அகதிகளில் சிலருக்கு, ஏற்கனவே அனுப்பிய நோட்டீஸ் சென்று அடையாததால், புதிதாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மூன்று வாரங்கள் ஒத்தி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X