சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் தாக்கியதில் வாலிபர் பலி? டி.ஐ.ஜி., மாஜிஸ்திரேட் விசாரணை

Added : ஆக 24, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தஞ்சாவூர்,-போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் இறந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. தஞ்சாவூர், சீதா நகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்., ஊழியர்சுவாமிநாதன். 11ம் தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 5 லட்சம் ரூபாய், 6 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.இது குறித்து, தஞ்சை மேற்கு போலீசில் சுவாமிநாதன் புகார் அளித்தார்.

தஞ்சாவூர்,-போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் இறந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

தஞ்சாவூர், சீதா நகரில் வசிக்கும் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்., ஊழியர்சுவாமிநாதன். 11ம் தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 5 லட்சம் ரூபாய், 6 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.இது குறித்து, தஞ்சை மேற்கு போலீசில் சுவாமிநாதன் புகார் அளித்தார். தனிப்படை அமைத்து, குற்றவாளிகளை தேடி வந்தனர்.

நேற்று முன்தினம் காலை, தஞ்சாவூர் அரசு மருத்துவமனை அருகே சுற்றிய மயிலாடுதுறை மாவட்டம், தாண்டவன்குளம் பகுதியைச் சேர்ந்த சத்தியவாணன், 31, என்பவர் உட்பட மூன்று பேரை, சந்தேகத்தில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தார்.விசாரணையில், சத்தியவாணன் மீது பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிந்தது. சுவாமிநாதன் வீட்டில்சேகரிக்கப்பட்ட கொள்ளையர்களின் கைரேகையுடன் சத்தியவாணன் கைரேகையை ஒப்பிட்டு பார்த்தனர்.

அவை ஒத்துப் போனதால், போலீசார், 'தங்கள்பாணியில்' சத்தியவாணனை விசாரித்தனர்.அப்போது, சத்தியவாணன் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், சத்தியவாணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, மருத்துவமனைக்கு சென்ற தஞ்சை டி.ஐ.ஜி., பிரவேஷ்குமார், எஸ்.பி., ரவளிப்ரியா, போலீசாரிடம் விசாரணை நடத்தினர். ஜே.எம். 1 மாஜிஸ்திரேட் முகமது அலி, இரண்டு மணி நேரத்திற்கு மேலாக, மருத்துவமனையில் விசாரணை நடத்தினார். இறந்த சத்தியவாணனுக்கு தாய் மற்றும் இரண்டு சகோதரிகள் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nanban - Kajang,மலேஷியா
24-ஆக-202109:40:28 IST Report Abuse
Nanban இவர் சிறுபான்மை வகுப்பை சார்ந்தவர் அல்ல எனவே இது லாக்கப் சாவின் கீழ் வராது . இது தி மு க வின் சட்ட திட்டங்களில் ஒன்று.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X