பொது செய்தி

தமிழ்நாடு

வகுப்புக்கு மட்டுமே அனுமதி; விழா கூடாது! பள்ளி, கல்லூரி நிர்வாகங்களுக்கு எச்சரிக்கை

Added : ஆக 24, 2021
Share
Advertisement
கோவை:''பள்ளி, கல்லுாரிகளில் வகுப்பு மட்டுமே நடத்த வேண்டும். எவ்விதமான நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது,'' என, கலெக்டர் சமீரன் எச்சரித்துள்ளார்.பள்ளி, கல்லுாரிகள் செப்., 1 முதல் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து, அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம், கோவையில் நேற்று நடந்தது.கலெக்டர் சமீரன் பேசியதாவது:பள்ளிகளில், 9, 10, 11, 12ம் வகுப்புகள்,
 வகுப்புக்கு மட்டுமே அனுமதி; விழா கூடாது! பள்ளி, கல்லூரி நிர்வாகங்களுக்கு எச்சரிக்கை

கோவை:''பள்ளி, கல்லுாரிகளில் வகுப்பு மட்டுமே நடத்த வேண்டும். எவ்விதமான நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது,'' என, கலெக்டர் சமீரன் எச்சரித்துள்ளார்.பள்ளி, கல்லுாரிகள் செப்., 1 முதல் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து, அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம், கோவையில் நேற்று நடந்தது.கலெக்டர் சமீரன் பேசியதாவது:பள்ளிகளில், 9, 10, 11, 12ம் வகுப்புகள், கல்லுாரி வகுப்புகள், பட்டய படிப்பு வகுப்புகள் சுழற்சி முறையில் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. வகுப்பறைகள், பொது இடங்களை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும். ஆசிரியர்கள், பணியாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.பள்ளிகள், கல்லுாரிகளில் சிறப்பு முகாம் நடத்தி ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.வரும், 28 முதல், 30 வரையான நாட்களில், கல்லுாரிகளில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். வகுப்பறைகளில் சமூக இடைவெளி விட்டு பெஞ்சுகள் அமைக்க வேண்டும்.அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.நுழைவாயிலில் சானிடைசர் வைக்க வேண்டும். காய்ச்சல் உள்ளவர்களை அனுமதிக்கக்கூடாது. மாணவர்கள் உள்ளே வரவும், வெளியேறவும் தனித்தனி வழிகளை பின்பற்ற வேண்டும். கல்லுாரிகள், பள்ளிகளில் எவ்விதமான நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்களை நடத்த அனுமதி கிடையாது. பள்ளி திறப்பதற்கு முன், அரசு வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தையும் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் பேசினார்.தொற்று எதிர்பாற்றல்ஆய்வு செய்ய முடிவுகொரோனா நோய் தொற்றுக்கான எதிர்ப்பாற்றல் குறித்து, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் சார்பில், கடந்த மாதம் நாடு முழுவதும் நான்காம் கட்ட ஆய்வு நடத்தப்பட்டது. கோவையில், 400 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது. அதன் முடிவுகளை ஆய்வு செய்ததில், தமிழக அளவில், நோய் எதிர்பாற்றலில் கோவை இரண்டாமிடம் பிடித்தது. தற்போது தொற்று பரவல் கட்டுப்பாட்டில் இருப்பதால், தளர்வுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. அதனால், அடுத்த கட்டமாக மீண்டும் ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில், 'இம்முறை, 42 இடங்களுக்கு பதில், 22 இடங்களில், மாதிரிகள் சேகரிக்கப்படும்; 660 மாதிரிகள் சேகரிக்கப்பட உள்ளன. குறிப்பிட்ட பகுதிகளில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் மாதிரிகள் எடுக்கப்படும்; கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதிக்கப்படும்' என்றனர்.தடுப்பூசி போடாமல் இருந்தால் விடுப்புசில கல்லுாரிகள் கொரோனா சிகிச்சை மையங்களாக செயல்படுவதால், அவற்றை மாற்றுவது தொடர்பாக இன்று ஆலோசித்து வழிகாட்டுதல் வெளியிடப்பட உள்ளது. கல்லுாரிகள் பல மாதங்களாக மூடப்பட்டு இருப்பதால் ஆய்வகம், விளையாட்டு உபகரணம், நாற்காலி உள்ளிட்டவற்றை கிருமிநாசினியால் சுத்தம் செய்யவும், தடுப்பூசி சிறப்பு முகாம் கல்லுாரிகளில் ஏற்பாடு செய்யவும், சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய கண்காணிப்பு குழு அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.கொரோனா தொற்று அறிகுறியுள்ள மாணவர்கள் கண்டறியப்பட்டால், உடனடியாக தொடர்பில் இருந்த அனைத்து மாணவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவும், தடுப்பூசி போட்டவர்கள், போடாதவர்கள் எண்ணிக்கை தயாராக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கை, அனைத்து கல்லுாரிகளுக்கும், கல்லுாரி கல்வி இணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து நேற்று அனுப்பப்பட்டது.பேராசிரியர், அலுவலக பணியாளர்களில் இரண்டு தவணை தடுப்பூசி போடாதவர்கள் இருந்தால் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவர் என, கோவை மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் உலகி எச்சரித்துள்ளார்.சிகிச்சை மையங்கள் மூட சுகாதார துறை 'பிளான்'சுகாதார துறை மாவட்ட துணை இயக்குனர் அருணா கூறுகையில்,''கோவையில், 10 கொரோனா சிகிச்சை மையங்கள் பள்ளி, கல்லுாரிகளில் செயல்படுகின்றன. இவற்றில், 2,963 படுக்கைகள் உள்ளன. இவற்றில், 150 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பள்ளி, கல்லுாரிகள் திறக்க உள்ளதால், கொரோனா சிகிச்சை மையங்களை மூடுவது குறித்து ஆலோசித்து வருகிறோம்,'' என்றார்.கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில்,''அரசு கல்லுாரியின் ஒரு பகுதியில், நோயாளிகளின் நோய்த்தன்மை அறிவதற்கான மையம் செயல்படுகிறது. பரிசோதனைக்கு பின்னரே நோயாளிகள் அனுமதிக்கப்படுவர். அரசு கல்லுாரி நிர்வாகம் கோரிக்கை விடுத்தால், அம்மையத்தை மூடுவது குறித்து முடிவெடுக்கப்படும்,'' என்றார்.'இனி, நெரிசல் குறையும்'கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 24 மணி நேர தடுப்பூசி மையத்தை, கலெக்டர் சமீரன் நேற்று துவக்கி வைத்து, கூறுகையில்,''அரசு மருத்துவமனையில், 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தும்போது, சிறப்பு முகாம்களில் கூட்ட நெரிசல் குறையும். இ.எஸ்.ஐ., மருத்துவமனை மற்றும் பிற அரசு மருத்துவமனைகளிலும் இத்திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X