மும்பை-இனி 'டிஜிட்டல்' பணப் பரிவர்த்தனைக்கு, 'கிரெடிட் அல்லது டெபிட் கார்டின்' 16 இலக்க எண்ணை அளிக்கும் புதிய திட்டத்தை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.

'அமேசான், பிளிப்கார்ட்' போன்ற மின்னணு வர்த்தக நிறுவனங்களிடம் பொருட்கள் வாங்க, 'பே.டி.எம், கூகுள் பே' போன்ற செயலிகள் உதவுகின்றன. இதற்கு கிரெடிட் அல்லது டெபிட் கார்டின் பின்புறம் உள்ள மூன்று இலக்க சி.வி.வி., விபரத்தை மட்டும் வழங்கினால் போதும்; பணம் பட்டுவாடா ஆகிவிடும்.
ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைப்படி, இனி இத்தகைய டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு டெபிட், கிரெடிட் கார்டின் 16 இலக்க எண், காலாவதியாகும் நாள் ஆகியவற்றுடன் சி.வி.வி., விபரத்தையும் தெரிவிக்க வேண்டும். எனினும், ஒவ்வொரு டிஜிட்டல் பரிவர்த்தனையின் போதும் டெபிட், கிரெடிட் கார்டுகளின் 16 இலக்க எண்ணை தெரிவிப்பது சிரமமாக இருக்கும்.

ஒருவரிடம் பல கார்டுகள் இருக்கும் என்பதால் 16 இலக்க எண்ணை நினைவில் வைத்திருப்பதும் கடினம் என, நுகர்வோர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்களின் பணப் பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மேற்கொள்ளவே, புதிய விதிமுறை அறிமுகமாக உள்ளதாக, ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த புதிய நடைமுறை அடுத்தாண்டு முதல் அமலுக்கு வரும் என தெரிகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE