ஆலோசகர்களை வரவழைத்து நவ்ஜோத் சிங் சித்து அறிவுரை| Dinamalar

ஆலோசகர்களை வரவழைத்து நவ்ஜோத் சிங் சித்து அறிவுரை

Updated : ஆக 24, 2021 | Added : ஆக 24, 2021 | கருத்துகள் (3)
Share
சண்டிகர்-காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தன் ஆலோசகர்களை, பஞ்சாப் மாநில காங்., தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, தன் வீட்டிற்கு அழைத்து அறிவுரை வழங்கி உள்ளார்.பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, மாநில காங்., தலைவராக சித்து பொறுப்பேற்ற பின், அமரீந்தருக்கும், சித்துவுக்கும் இடையில் நிலவிய மோதல்

சண்டிகர்-காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தன் ஆலோசகர்களை, பஞ்சாப் மாநில காங்., தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, தன் வீட்டிற்கு அழைத்து அறிவுரை வழங்கி உள்ளார்.



latest tamil news


பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, மாநில காங்., தலைவராக சித்து பொறுப்பேற்ற பின், அமரீந்தருக்கும், சித்துவுக்கும் இடையில் நிலவிய மோதல் போக்கு முடிவுக்கு வந்ததாகக் கூறப்பட்டது.இந்நிலையில், சித்துவின் ஆலோசகர்களால் அவருக்கு மீண்டும் தலைவலி ஏற்பட்டுள்ளது. மல்விந்தர் சிங் மாலி மற்றும் பியாரே லால் கார்க் என்ற இருவரையும், சித்து தன் ஆலோசகர்களாக நியமித்தார்.


latest tamil news


இவர்கள் இருவரும் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்தனர். சித்து ஆலோசகர்களின் இந்த கருத்துகளால் ஆத்திரமடைந்த அமரீந்தர் சிங், அவர்களுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தன் ஆலோசகர்கள் இருவரையும் பாட்டியாலாவில் உள்ள தன் வீட்டிற்கு, சித்து நேற்று வரவழைத்தார். அவர்களுக்கு சித்து அறிவுரை வழங்கியதாகக் கூறப்படுகிறது.இதற்கிடையே, “இதுபோன்ற சர்ச்சை கருத்துகளை வெளியிடும் நபர்கள் கட்சியில் இருக்க வேண்டுமா,” என, காங்., - எம்.பி., மணிஷ் திவாரி கேள்வி எழுப்பி உள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X