‛கோவிட்' விதிமீறலுக்கு தண்டனை: தேர்தல் ஆணையத்துக்கு அவகாசம்

Updated : ஆக 24, 2021 | Added : ஆக 24, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: தேர்தல் பிரசாரத்தின் போது கொரோனா விதிமுறைகளை மீறுவோர், பிரசாரம் செய்வதற்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்ய, தேர்தல் கமிஷனுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களுக்கு சில மாதங்களுக்கு முன் சட்டசபை தேர்தல் நடந்தது. கொரோனா பரவல் இருந்ததால் பல கட்டுப்பாடுகளை தேர்தல் கமிஷனுக்கு விதித்து

புதுடில்லி: தேர்தல் பிரசாரத்தின் போது கொரோனா விதிமுறைகளை மீறுவோர், பிரசாரம் செய்வதற்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்டுள்ள வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்ய, தேர்தல் கமிஷனுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.



latest tamil news


தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களுக்கு சில மாதங்களுக்கு முன் சட்டசபை தேர்தல் நடந்தது. கொரோனா பரவல் இருந்ததால் பல கட்டுப்பாடுகளை தேர்தல் கமிஷனுக்கு விதித்து இருந்தது. உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் போலீஸ் டி.ஜி.பி.,யான விக்ரம் சிங், டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 'தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடும் தலைவர்கள் முகக்கவசம் அணிவது போன்ற கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. இவ்வாறு விதிகளை மீறுவோர் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும்' என, மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.


latest tamil news


இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.என். படேல் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. 'ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் முடிந்துவிட்டதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, தேர்தல் கமிஷன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அதை நீதிமன்றம் ஏற்கவில்லை. பதில் மனுத்தாக்கல் செய்வதற்கு அவகாசம் அளித்து, அக்., 18க்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. Vidya Sagar - Chennai,இந்தியா
24-ஆக-202110:27:26 IST Report Abuse
R. Vidya Sagar முதுகெலும்பு இல்லாத தேர்தல் கமிஷன்.
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
24-ஆக-202109:00:14 IST Report Abuse
venkatan நாங்க கோரோணாவுக்கே பயப்படவில்லை... தேர்தல் ஆணையத்துக்கும்,நீதி மன்றத்துக்குமா பயப்பட வேண்டும்..
Rate this:
Cancel
24-ஆக-202106:46:59 IST Report Abuse
அப்புசாமி தேர்தல் கமிஷனை குற்றவாளின்னு சொல்லி, அந்தக் கட்டிடற்றை தூக்கி ஜெயில்ல போட்டுரலாம். பறந்து பறந்து வந்து பரப்புனவங்க பாவம் நிரபராதிகள். விட்டுருங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X