சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துபாயிலிருந்து வந்தவர் மாயம்

Added : ஆக 24, 2021
Share
Advertisement
திருவல்லிக்கேணி : திருவல்லிக்கேணியில், துபாயில் இருந்து விடுமுறைக்கு வந்த கணவரை காணவில்லை என, அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.திருவல்லிக்கேணி, எம்.பி.என்., தெருவைச் சேர்ந்தவர் ஷாகுல் அமீது, 52. இவரது மனைவி பஷீரா, 48. துபாயில் பணிபுரிந்து வந்த ஷாகுல் அமீது, மூன்றாண்டுக்கு ஒருமுறை, இரண்டு மாத விடுமுறைக்கு வந்து குடும்பத்துடன் செலவிடுவது வழக்கம்.அதன்படி, இந்தாண்டு மார்ச்

திருவல்லிக்கேணி : திருவல்லிக்கேணியில், துபாயில் இருந்து விடுமுறைக்கு வந்த கணவரை காணவில்லை என, அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.

திருவல்லிக்கேணி, எம்.பி.என்., தெருவைச் சேர்ந்தவர் ஷாகுல் அமீது, 52. இவரது மனைவி பஷீரா, 48. துபாயில் பணிபுரிந்து வந்த ஷாகுல் அமீது, மூன்றாண்டுக்கு ஒருமுறை, இரண்டு மாத விடுமுறைக்கு வந்து குடும்பத்துடன் செலவிடுவது வழக்கம்.அதன்படி, இந்தாண்டு மார்ச் மாதம் துபாயிலிருந்து சென்னை வந்தார். பின், கொரோனா காரணமாக மீண்டும் துபாய் செல்ல இயலவில்லை.

இதனால், மன உளைச்சலில் இருந்த அவர், கடந்த மாதம் 26ம் தேதி மாயமானார்.ஒரு மாதமாக உறவினர்கள், நண்பர்கள் வீடு என, பல இடங்களில் தேடியும் கிடைக்காததை தொடர்ந்து, பஷீரா ஜாம்பஜார் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X