தடுப்பூசி கொள்முதல் நீதிமன்றம் உத்தரவு

Added : ஆக 24, 2021
Share
Advertisement
மும்பை-கொரோனா தடுப்பூசி கொள்முதல் மற்றும் அவற்றை மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் முறை குறித்து விளக்கம் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களில் இருந்து தடுப்பு மருந்தை கொள்முதல் செய்து, அதை அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது.இந்நிலையில் 'கோ - வின்' இணையதளம்
 தடுப்பூசி கொள்முதல் நீதிமன்றம் உத்தரவு

மும்பை-கொரோனா தடுப்பூசி கொள்முதல் மற்றும் அவற்றை மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் முறை குறித்து விளக்கம் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களில் இருந்து தடுப்பு மருந்தை கொள்முதல் செய்து, அதை அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது.இந்நிலையில் 'கோ - வின்' இணையதளம் வாயிலாக தடுப்பூசிக்கு முன்பதிவு செய்கையில் பல்வேறு சிக்கல்களை மக்கள் சந்திப்பதாக மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், 'தடுப்பூசி கையிருப்பு குறித்து மத்திய, மாநில அரசுகள் முன்கூட்டியே ஏன் அறிவிப்புகளை வெளியிடுவதில்லை' என, கேள்வி எழுப்பியது.இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தடுப்பூசி கொள்முதல், அவற்றை மாநிலங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் முறை குறித்து, வரும் 27ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X