பொது செய்தி

தமிழ்நாடு

காப்பீடு திட்டம்; 31 வரை வாய்ப்பு

Added : ஆக 24, 2021
Share
Advertisement
கோவை:'பயிர் காப்பீடு திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், வரும் 31க்குள் பிரீமியம் செலுத்தி, பதிவு செய்ய வேண்டும்' என, கோவை கலெக்டர் சமீரன் அறிவுறுத்தியுள்ளார்.பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில், 'காரிப்' பருவத்தில் சோளம், மக்காச்சோளம், பருத்தி, துவரை, கொள்ளு, நிலக்கடலை ஆகிய பயிர்களுக்கு காப்பீடு பெற முடியும். இந்த பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள்,

கோவை:'பயிர் காப்பீடு திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், வரும் 31க்குள் பிரீமியம் செலுத்தி, பதிவு செய்ய வேண்டும்' என, கோவை கலெக்டர் சமீரன் அறிவுறுத்தியுள்ளார்.பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில், 'காரிப்' பருவத்தில் சோளம், மக்காச்சோளம், பருத்தி, துவரை, கொள்ளு, நிலக்கடலை ஆகிய பயிர்களுக்கு காப்பீடு பெற முடியும். இந்த பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள், இயற்கை பேரிடர்களில் இருந்து காத்துக்கொள்ள, காப்பீடு செய்வது அவசியம்.சோளம் ஏக்கருக்கு 226 ரூபாய், மக்காச்சோளத்துக்கு 600 ரூபாய், பருத்திக்கு 498 ரூபாய், நிலக்கடலைக்கு 597 ரூபாய், கொள்ளு, துவரைக்கு 342 ரூபாய் காப்பீடு கட்டணமாக செலுத்த வேண்டும்.சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம், போட்டோ ஆகியவற்றுடன் இ-சேவை மையங்கள், தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய வங்கிக்குச் சென்று, 31க்குள் பிரீமியம் செலுத்தி காப்பீடு பெறலாம் என, கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X