கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பெண் இன்ஸ்பெக்டரை கைது செய்யாதது ஏன்: ஐகோர்ட் கேள்வி

Added : ஆக 24, 2021
Share
Advertisement
மதுரை,-'பணம் பறிப்பு வழக்கில், பெண் இன்ஸ்பெக்டரை கைது செய்யாதது ஏன்' என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.சிவகங்கை மாவட்டம், இளையாங்குடியைச் சேர்ந்த டெய்லர் அர்ஷத். இவர், கடன் வாங்க பாண்டி என்பவரை சந்திக்க, ஜூலை 5ல் மதுரை நாகமலை புதுக்கோட்டை வந்தார்.அப்போது அர்ஷத், பாண்டி மற்றும் அவரது நண்பர் கார்த்திக்கை

மதுரை,-'பணம் பறிப்பு வழக்கில், பெண் இன்ஸ்பெக்டரை கைது செய்யாதது ஏன்' என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம், இளையாங்குடியைச் சேர்ந்த டெய்லர் அர்ஷத். இவர், கடன் வாங்க பாண்டி என்பவரை சந்திக்க, ஜூலை 5ல் மதுரை நாகமலை புதுக்கோட்டை வந்தார்.அப்போது அர்ஷத், பாண்டி மற்றும் அவரது நண்பர் கார்த்திக்கை விசாரிக்க வேண்டும் எனக் கூறி, போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி ஜீப்பில் அழைத்துச் சென்றார். பின், தன்னிடம் 10 லட்சம் ரூபாயை பறித்து, இறக்கி விட்டதாகவும், பணத்தை கேட்டதற்கு தங்கம், கஞ்சா கடத்தியதாக கைது செய்து விடுவேன் என வசந்தி மிரட்டியதாகவும், எஸ்.பி.,யிடம் அர்ஷத் புகார் செய்தார். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் வசந்தி, பாண்டி, கார்த்திக் உட்பட சிலர் மீது மோசடி, மிரட்டல் பிரிவுகளில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்தனர்.

வசந்தி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.வசந்தி, 'எனக்கு எதிராக ஆவணங்கள் இல்லை. பொய் வழக்கு பதியப்பட்டுள்ளது. முன்ஜாமின் அனுமதிக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற கிளையில் மனு செய்தார்.நீதிபதி பி.புகழேந்தி உத்தரவு:மனுதாரர் மீதான குற்றச்சாட்டு தீவிரமானது. மனுதாரர் மற்றும் அவரது டிரைவரை ஏன் கைது செய்யவில்லை. இதற்கான காரணம் என்ன, சம்பந்தப்பட்ட போலீசார் திறம்பட செயல்படவில்லை என்பதை இதை தெளிவுபடுத்துகிறது. வழக்கு ஆவணங்கள், விசாரணை அறிக்கையை போலீசார் செப்., 2ல் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X