பொது செய்தி

தமிழ்நாடு

'வந்தே பாரத்' அதிவேக ரயில் பெட்டி

Added : ஆக 24, 2021
Share
Advertisement
சென்னை : ஐ.சி.எப்.,பில் மீண்டும் 'வந்தே பாரத்' எனும் அதிவேக ரயில் பெட்டிகள் தயாரிப்புக்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன.சென்னையில் உள்ள ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையான ஐ.சி.எப்.,பில், 2018ல் 'ரயில் - 18' திட்டத்தில், இன்ஜின் இல்லாத முதல் அதிவேக ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன.160 கி.மீ., வேகம்இந்த ரயில், டில்லியில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மற்றும் ஜம்மு -

சென்னை : ஐ.சி.எப்.,பில் மீண்டும் 'வந்தே பாரத்' எனும் அதிவேக ரயில் பெட்டிகள் தயாரிப்புக்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள ரயில் பெட்டி இணைப்பு தொழிற்சாலையான ஐ.சி.எப்.,பில், 2018ல் 'ரயில் - 18' திட்டத்தில், இன்ஜின் இல்லாத முதல் அதிவேக ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டன.160 கி.மீ., வேகம்இந்த ரயில், டில்லியில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மற்றும் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீமாதா வைஷ்ணவதேவி கட்ராவுக்கு இயக்கப்பட்டு வருகிறது. மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் இயங்கக்கூடியது.இதையடுத்து, பல்வேறு காரணங்களால், ஐ.சி.எப்.,பில் வந்தே பாரத் ரயில் பெட்டி தயாரிப்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டது.

இனிமேல், இந்த ரயில் ஐ.சி.எப்.,பில் தயாரிக்கப்படாது; நாட்டில் உள்ள மற்ற ரயில்வே தொழிற்சாலைகளில் தயாரிக்க ஏற்பாடு செய்வதற்கு, ரயில்வே துறை ஆலோசித்து வருவதாகவும் பேசப்பட்டது.கூடுதல் தொழில்நுட்பம்இந்நிலையில், ஐ.சி.எப்.,பில் நடந்த, 75வது சுதந்திர தின விழாவில், பொது மேலாளர் ஏ.கே.அகர்வால் பேசுகையில், 'ஐ.சி.எப்.,பில் 'ரயில் -- 18' திட்டத்தில் மீண்டும் 'வந்தே பாரத்' அதிவேக ரயில் பெட்டிகள், கூடுதல் தொழில்நுட்ப வசதிகளுடன் தயாரிக்கப்படும்' என தெரிவித்திருந்தார்.இதையொட்டி, 'வந்தே பாரத்' ரயில் பெட்டிகள் தயாரிப்பில், மேலும் நவீன தொழில்நுட்பம் புகுத்தப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும், ஒப்பந்தம் தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும், ஆலோசிக்கப்பட்டன.

முதற்கட்டமாக, ஒரு ரயிலுக்கான 16 பெட்டிகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு பணி, 2022 மார்ச் 31ம் தேதிக்குள் முடிக்கப்பட்டு, உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஆர்.டி.எஸ்.ஓ., எனும், ரயில் பெட்டி ஆராய்ச்சி வடிவமைப்பு தரநிலை ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. ஆர்.டி.எஸ்.ஓ., அனுமதிக்கு பின், தேவையான ரயில் பெட்டிகள் தயாரிக்க வியூகம் வகுக்கப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X