பொது செய்தி

தமிழ்நாடு

கடலில் குளித்த 3 மாணவர்கள் மாயம் மெரினா திறக்கப்பட்ட முதல் நாளே சோகம்

Added : ஆக 24, 2021
Share
Advertisement
அண்ணா சதுக்கம் : மெரினா கடற்கரையில் அனுமதி அளிக்கப்பட்ட முதல் நாளே, கடலில் குளித்த மாணவர்கள் மூவர் மாயமானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கொரோனா தொற்று பரவல் தமிழகத்தில் குறைந்ததை அடுத்து, அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. அதில் தியேட்டர்கள் திறப்பு, சுற்றுலா தலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டன. அந்த வகையில், நேற்று அதிகாலை முதலே கடற்கரைகளில் மக்கள் குவியத்

அண்ணா சதுக்கம் : மெரினா கடற்கரையில் அனுமதி அளிக்கப்பட்ட முதல் நாளே, கடலில் குளித்த மாணவர்கள் மூவர் மாயமானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா தொற்று பரவல் தமிழகத்தில் குறைந்ததை அடுத்து, அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. அதில் தியேட்டர்கள் திறப்பு, சுற்றுலா தலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டன. அந்த வகையில், நேற்று அதிகாலை முதலே கடற்கரைகளில் மக்கள் குவியத் துவங்கினர்.சென்னை மெரினாவிற்கு காலை முதலே கூட்டம் வரத் துவங்கியது. இளைஞர்கள், சிறுவர்கள் என, பல தரப்பினரும் கடல் அலையில் குளித்து மகிழ்ந்தனர்.அதில், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 பயிலும், ஆழ்வார்பேட்டை, பல்லாவரம் பகுதிகளைச் சேர்ந்த விமல், 17, சபரிநாதன், 17, தர்மராஜ், 17, ஆகிய மாணவர்கள் மூவர், கடல் அலையில் சிக்கி மாயமாகினர்.

இதைப் பார்த்த, உடன் வந்த நண்பர்கள் அலறினர்.ஆனால், அருகே நீச்சல் பயிற்சி பெற்றவர்கள் யாரும் இல்லாததால் கடல் அலையில் சிக்கியவர்களை காப்பாற்ற முடியவில்லை. பின், இது குறித்து சிறுவர்கள் அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கடலில் குளித்துக் கொண்டிருந்த பொதுமக்களை வெளியேற்றினர்.தொடர்ந்து, சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கடலில் மாயமான சிறுவர்களை கடலோர காவல் படை மற்றும் மீனவர்கள் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும், ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X