பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை ஆதீன மடத்தின் புதிய பீடாதிபதி பதவியேற்பு

Updated : ஆக 24, 2021 | Added : ஆக 24, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
மதுரை-மதுரை ஆதீன மடத்தின் புதிய பீடாதிபதியாக ஹரஹர ஞானசம்பந்த தேசிய பராமச்சாரிய சுவாமிகள் நேற்று பொறுப்பேற்றார்.மதுரை ஆதீன மடத்தின் 292வது பீடாதிபதி அருணகிரிநாதர், 77 உடல்நலக் குறைவால் ஆக., 12ல் காலமானார். 2019 ஜூன் 6ல், ஹரஹர ஞானசம்பந்த தேசிய பராமச்சாரிய சுவாமிகள், இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டிருந்தார்.இவர் நேற்று, மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியாக பொறுப்பேற்றார்.

மதுரை-மதுரை ஆதீன மடத்தின் புதிய பீடாதிபதியாக ஹரஹர ஞானசம்பந்த தேசிய பராமச்சாரிய சுவாமிகள் நேற்று பொறுப்பேற்றார்.



latest tamil news


மதுரை ஆதீன மடத்தின் 292வது பீடாதிபதி அருணகிரிநாதர், 77 உடல்நலக் குறைவால் ஆக., 12ல் காலமானார். 2019 ஜூன் 6ல், ஹரஹர ஞானசம்பந்த தேசிய பராமச்சாரிய சுவாமிகள், இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டிருந்தார்.இவர் நேற்று, மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியாக பொறுப்பேற்றார். முன்னதாக, அருணகிரிநாதர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பூஜைகள் செய்தார்.

பின் மடத்திற்கு வந்தவருக்கு தருமபுரம், திருவாவடுதுறை ஆதீனங்கள், பதவியேற்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தனர். இணை கமிஷனர்மீனாட்சி அம்மன் கோவில் இணை கமிஷனர் செல்லதுரை தலைமையில், ஆதீனங்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.புதிய ஆதீனம், மீனாட்சி கோவிலில் விடுபட்ட உஷகால கட்டளை நிறைவேற்றுதல், மடத்தில் அன்னதானம் வழங்குதல், மடத்திற்கு சொந்தமான நான்கு கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்துதல் உட்பட ஆறு உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.


latest tamil news


ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட ஹிந்து அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்றனர். மாலை 4:00 மணிக்கு மீனாட்சி கோவிலில் ஆதீனம் வழிபட்டார். பின், சித்திரை வீதிகளில் ஊர்வலமாக சென்றார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
25-ஆக-202101:02:58 IST Report Abuse
Bhaskaran குருமகா சன்னிதானம் தயவு செய்து சாக்கடை அரசியலில் தலையிடவேண்டாம் சைவசமய வளர்ச்சிக்கு அரும்பணியாற்றுங்கள் ஐயா
Rate this:
Cancel
கௌடில்யன் - Chennai ,இந்தியா
24-ஆக-202106:13:15 IST Report Abuse
கௌடில்யன் மடாதிபதியாகவே தொண்டு புரிந்து அரசியலில் தலையிடாம இருக்கணும் ..
Rate this:
Cancel
24-ஆக-202105:08:20 IST Report Abuse
அப்புசாமி அப்போ நித்தி ஸ்வாமிகள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X