மதுபாட்டில் விற்றவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுபாட்டில் விற்றவர் கைது

Added : ஆக 24, 2021
Share
ஆதம்பாக்கம் : சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 80 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.சென்னை, ஆதம்பாக்கம், நியூ காலனி பிரதான சாலையில் செயல்படும் 'டாஸ்மாக்' கடைக்கு அருகில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக, தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது.இது தொடர்பாக, தொடர்ந்து கண்காணித்த

ஆதம்பாக்கம் : சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடமிருந்து 80 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.சென்னை, ஆதம்பாக்கம், நியூ காலனி பிரதான சாலையில் செயல்படும் 'டாஸ்மாக்' கடைக்கு அருகில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக, தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது.இது தொடர்பாக, தொடர்ந்து கண்காணித்த போலீசார், மது விற்பனை செய்த ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ்வரன், 28, என்பவரை கைது செய்தனர்.அவரிடமிருந்து 65 மது பாட்டில்கள், 15 பீர் பாட்டில்கள் என 80 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைஅடுத்து, போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X