பொது செய்தி

தமிழ்நாடு

மதியம், 12:30க்கு ரேஷன் கடை மூடல்

Added : ஆக 24, 2021
Share
Advertisement
கோவை:சிங்காநல்லுார் அருகே தனலட்சுமிபுரத்தில் ரேஷன் கடை மதியம், 12:30க்கு முன்பே உணவு இடைவேளை என மூடப்படுவதால், அப்பகுதி மக்கள் அலைச்சலுக்கு ஆளாகின்றனர்.கோவை மாவட்டத்தில், 1,401 ரேஷன் கடைகள் உள்ளன. காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி செயல்பட வேண்டும். உணவு இடைவேளை - மதியம், 1:00 முதல், 2:00 மணி வரை.சிங்காநல்லுார் அருகே சென்ட்ரல் ஸ்டுடியோ பஸ் ஸ்டாப்பில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள
 மதியம், 12:30க்கு ரேஷன் கடை மூடல்

கோவை:சிங்காநல்லுார் அருகே தனலட்சுமிபுரத்தில் ரேஷன் கடை மதியம், 12:30க்கு முன்பே உணவு இடைவேளை என மூடப்படுவதால், அப்பகுதி மக்கள் அலைச்சலுக்கு ஆளாகின்றனர்.கோவை மாவட்டத்தில், 1,401 ரேஷன் கடைகள் உள்ளன. காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி செயல்பட வேண்டும். உணவு இடைவேளை - மதியம், 1:00 முதல், 2:00 மணி வரை.சிங்காநல்லுார் அருகே சென்ட்ரல் ஸ்டுடியோ பஸ் ஸ்டாப்பில் இருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனலட்சுமிபுரத்தில், இரு ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இதில், எண்: 44 கொண்ட கடையை மதியம், 12:30 மணிக்கே உணவு இடைவேளை எனக்கூறி, மூடப்படுவதால், அலைச்சலுக்கு ஆளாவதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.மக்கள் கூறுகையில்,'மதியம், 12:30 மணிக்கு முன்பே இந்த ரேஷன் கடை மூடப்படுகிறது. கேள்வி எழுப்பினால், எங்களுக்கு உணவு இடைவேளை என ஊழியர் கூறுகிறார். மாவட்ட வழங்கல் அதிகாரியிடம் (டி.எஸ்.ஓ.,) புகார் அளிப்போம் என்றால், அவருக்கு 'போன்' பண்ணுங்க; பேசிக்கிறேன் என்கிறார். அருகேயுள்ள ரேஷன் கடையில் மதியம், 1:00 வரை பொருட்கள் வழங்கப்படுகின்றன' என்றனர்.மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன் கூறுகையில்,''ரேஷன் கடை காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை, மதியம், 2:00 முதல் மாலை, 5:00 மணி வரைய செயல்பட வேண்டும். மதியம், 1:00 முதல், 2:00 மணி வரையே உணவு இடைவேளை. புகார் குறித்து விசாரிக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X