பொது செய்தி

தமிழ்நாடு

கோரிக்கைகளை வலியுறுத்தி மனு

Added : ஆக 24, 2021
Share
Advertisement
கோவை:பேரூராட்சிகளில் பணிபுரியும் சுய உதவிக்குழு துாய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்யக்கோரி, சி.ஐ.டி.யு., ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர், கோவை கலெக்டரிடம் மனு அளித்தனர்.அதில், 'பேரூராட்சிகளில் சுய உதவி துாய்மை பணியாளர்கள், குடிநீர் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். பணியாளர்களுக்கு பி.எப்., - இ.எஸ்.ஐ., - இன்சூரன்ஸ் வசதிகளை ஏற்படுத்த வேண்டும், சுய

கோவை:பேரூராட்சிகளில் பணிபுரியும் சுய உதவிக்குழு துாய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்யக்கோரி, சி.ஐ.டி.யு., ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர், கோவை கலெக்டரிடம் மனு அளித்தனர்.அதில், 'பேரூராட்சிகளில் சுய உதவி துாய்மை பணியாளர்கள், குடிநீர் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். பணியாளர்களுக்கு பி.எப்., - இ.எஸ்.ஐ., - இன்சூரன்ஸ் வசதிகளை ஏற்படுத்த வேண்டும், சுய உதவிக்குழு பணியாளர்கள் ஓய்வு பெறும்போது, ஓய்வூதியம் வழங்க வேண்டும்' என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.எம்.பி., நடராஜன் தலைமையில், ஊரக உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க தலைவர் பத்மநாபன், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் மனுவை, கலெக்டரிடம் வழங்கினர்.முன்னதாக, கலெக்டர் அலுவலகம் முன், துாய்மை தொழிலாளர்கள் பெருந்திரள் மனு அளிப்பு இயக்கத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X