சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏரிகளில் செங்கை கலெக்டர் ஆய்வு ; கழிவு நீர் கலப்பை தடுக்க நடவடிக்கை

Added : ஆக 24, 2021
Share
Advertisement
குரோம்பேட்டை : வீரராகவன், நெமிலிச்சேரி ஏரிகளை ஆய்வு செய்த, செங்கல்பட்டு கலெக்டர், ஏரிகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும், சுற்றுச்சுவர் கட்டவும், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டையில், நெமிலிச்சேரி ஏரி உள்ளது. பொதுப்பணித் துறையினரின் அலட்சியத்தால், பெரும்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, குடியிருப்புகளாக மாறிவிட்டன.இந்நிலையில்,
 ஏரிகளில் செங்கை கலெக்டர் ஆய்வு ; கழிவு நீர் கலப்பை தடுக்க நடவடிக்கை

குரோம்பேட்டை : வீரராகவன், நெமிலிச்சேரி ஏரிகளை ஆய்வு செய்த, செங்கல்பட்டு கலெக்டர், ஏரிகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்கவும், சுற்றுச்சுவர் கட்டவும், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டையில், நெமிலிச்சேரி ஏரி உள்ளது.

பொதுப்பணித் துறையினரின் அலட்சியத்தால், பெரும்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, குடியிருப்புகளாக மாறிவிட்டன.இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று, இந்த ஏரியில் படர்ந்துள்ள, ஆகாய தாமரையை, ஏரி பாதுகாப்பு குழுவினர் அகற்றி வருகின்றனர். சமூக ஆர்வலர்கள் வழங்கிய நன்கொடையை பயன்படுத்தி, இப்பணியை செய்து வருகின்றனர்.இதை ஊக்கப்படுத்தும் விதமாக, பல்லாவரம் எம்.எல்.ஏ., கருணாநிதி, தன் ஒரு மாதம் ஊதியத்தை, நன்கொடையாக வழங்கினார்.

இந்நிலையில், இவ்வேரியை, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், நேற்று, ஆய்வு செய்தார்.அப்போது, ஏரி பாதுகாப்பு குழுவினரின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தார்.தொடர்ந்து, ஏரியை புனரமைக்க, 9 கோடிக்கு திட்ட அறிக்கை தயார் செய்து, அரசுக்கு அனுப்பியுள்ளதாக, பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.அதற்கு, அதுவரை காத்திருக்காமல், சமூக பாதுகாப்பு நிதி மூலம், ஏரி பாதுகாப்பு குழுவினர், நடைபாதை அமைக்க முன்வந்தால், அனுமதி வழங்குமாறு கூறிய கலெக்டர், ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுத்து, சுற்றுச்சுவர் கட்ட உத்தரவிட்டார்.தொடர்ந்து, பல்லாவரம்- திருநீர்மலை உள்ளாட்சிகளின் எல்லையில், ஆகாய தாமரை மூடி, கழிவு நீர் குட்டைபோல் மாறிவிட்ட, வீரராகவன் ஏரியை ஆய்வு செய்த கலெக்டர், அவ்வேரியில் கழிவு நீர் கலப்பதை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X