பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை

Added : ஆக 24, 2021
Share
Advertisement
திருப்பூர், எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரியில், முதல்நாளான நேற்று, விளையாட்டு வீரர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் உட்பட சிறப்பு பிரிவினருக்கு, 'கவுன்சிலிங்' மற்றும் அட்மிஷன் நடந்தது.சிறப்பு ஒதுக்கீட்டில் விளையாட்டு பிரிவில் - 29; என்.சி.சி., பிரிவில் - 1, மாற்றுத்திறனாளி பிரிவில் - 4 பேர் என, 34 மாணவியர் நேற்று பங்கேற்றனர். அனைவரது உடல் வெப்பநிலையும்
 கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை

திருப்பூர், எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரியில், முதல்நாளான நேற்று, விளையாட்டு வீரர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் உட்பட சிறப்பு பிரிவினருக்கு, 'கவுன்சிலிங்' மற்றும் அட்மிஷன் நடந்தது.சிறப்பு ஒதுக்கீட்டில் விளையாட்டு பிரிவில் - 29; என்.சி.சி., பிரிவில் - 1, மாற்றுத்திறனாளி பிரிவில் - 4 பேர் என, 34 மாணவியர் நேற்று பங்கேற்றனர். அனைவரது உடல் வெப்பநிலையும் பரிசோதிக்கப்பட்டது.முக கவசம் அணிந்தவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியுடன் ஆடிட்டோரிய தரைத்தளத்தில் அமர வைக்கப்பட்டு, அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.ஆக., 25, 26 தேதிகளில் பி.காம்., பி.காம்., சி.ஏ., பி.பி.ஏ., பாடப்பிரிவுகளுக்கும், ஆக., 27ம் தேதி பி.ஏ., பொருளியல், பி.ஏ., வரலாறு பாடப்பிரிவுக்கும், ஆக., 28ல் அனைத்து அறிவியல் பாடங்களுக்கும், ஆக., 31ல் பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.ஏ., ஆங்கில இலக்கியம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது.தரையில்...கல்லுாரியில் போதுமான இருக்கை வசதி இருந்தும் கூட, மாணவியரை தரையில் அமர வைத்து, கவுன்சிலிங் நடத்தினர். இதையறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அரசு கல்லுாரியில், மாணவியரை இருக்கையில் அமர வைக்க, ஒரு வகுப்பறை கூட இல்லையோ என பெற்றோர் வேதனை தெரிவித்தனர்.பல்வேறு கல்லுாரிகளிலும் நேற்று இளங்கலை பாடப்பிரிவில் சேர 'கவுன்சிலிங்' துவங்கியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X