சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிரபல நகை கடையில் பயங்கர தீ விபத்து

Added : ஆக 24, 2021
Share
Advertisement
பூக்கடை : பூக்கடையில் உள்ள பிரபல நகைக் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை, பூக்கடை, என்.எஸ்.சி.போஸ் சாலையில், பாத்திமா ஜுவல்லரிஸ் நகைக் கடை செயல்பட்டு வருகிறது. இதன் தரை தளத்தில் நகைக் கடை உள்ளது. முதல் தளத்தில் அலுவலகமும், 2ம் தளத்தில் கடை ஊழியர்கள் தங்கும் அறை மற்றும் சமையல் கூடம் உள்ளது.4 மணி நேர போராட்டம்நேற்று மதியம், திடீரென இக்கடையில்
 பிரபல நகை கடையில்  பயங்கர தீ விபத்து

பூக்கடை : பூக்கடையில் உள்ள பிரபல நகைக் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை, பூக்கடை, என்.எஸ்.சி.போஸ் சாலையில், பாத்திமா ஜுவல்லரிஸ் நகைக் கடை செயல்பட்டு வருகிறது.

இதன் தரை தளத்தில் நகைக் கடை உள்ளது. முதல் தளத்தில் அலுவலகமும், 2ம் தளத்தில் கடை ஊழியர்கள் தங்கும் அறை மற்றும் சமையல் கூடம் உள்ளது.4 மணி நேர போராட்டம்நேற்று மதியம், திடீரென இக்கடையில் மின் கசிவு ஏற்பட்டது. இதையடுத்து, நகைக்கடை ஊழியர்கள் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர். திடீரென தீப்பற்றி, மளமளவென கடை முழுதும் பரவியது.

கீழே நகைக்கடையில் இருந்த ஊழியர்களும், பொதுமக்களும் அலறியடித்து வெளியேறினர். கடை முழுதும் பரவிய தீ, கொழுந்து விட்டு எரியத் துவங்கியது.தகவலறிந்து உயர்நீதிமன்றம், கோட்டை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம் பகுதி தீயணைப்பு வீரர்கள் வந்து, நான்கு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.இது குறித்து போலீசார் கூறியதாவது:காலையிலேயே சிறிய அளவில் மின் கசிவு இருந்தது. அதை சரி செய்தனர். பின் மீண்டும், 2வது முறையாக ஏற்பட்ட மின் கசிவால், பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. முதல் தளம், 2ம் தளம் முற்றிலும் எரிந்தது.விசாரணைமுதலாம் தளத்தில் இருந்த அனைத்து ஆவணங்களும் எரிந்தன.

இரண்டாம் தளத்தில் இருந்த கடை ஊழியர்களின் உடைமைகள், சமையல் பொருள்கள், தளவாடங்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின. தரை தளத்திலுள்ள நகைக்கடைக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து விசாரணை நடக்கிறது. பூக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X