3ம் சுற்றிலும் உடன்பாடு இல்லை: 27ல் 4ம் சுற்று நடத்த முடிவு| Dinamalar

தமிழ்நாடு

3ம் சுற்றிலும் உடன்பாடு இல்லை: 27ல் 4ம் சுற்று நடத்த முடிவு

Updated : ஆக 24, 2021 | Added : ஆக 24, 2021 | கருத்துகள் (1)
Share
திருப்பூர்:பனியன் உற்பத்தியாளர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் இடையே, நேற்று நடந்த மூன்றாம் கட்ட சம்பள பேச்சுவார்த்தையிலும், உடன்பாடு ஏற்படவில்லை. நான்காம் கட்ட பேச்சுவார்த்தை, வரும் 27ல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளருக்கு சம்பள உயர்வு வழங்குவதற்காக, ஆறு ஆடை உற்பத்தியாளர் சங்கங்கள் - எட்டு தொழிற்சங்கங்கள்
 3ம் சுற்றிலும் உடன்பாடு இல்லை: 27ல் 4ம் சுற்று நடத்த முடிவு

திருப்பூர்:பனியன் உற்பத்தியாளர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் இடையே, நேற்று நடந்த மூன்றாம் கட்ட சம்பள பேச்சுவார்த்தையிலும், உடன்பாடு ஏற்படவில்லை. நான்காம் கட்ட பேச்சுவார்த்தை, வரும் 27ல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளருக்கு சம்பள உயர்வு வழங்குவதற்காக, ஆறு ஆடை உற்பத்தியாளர் சங்கங்கள் - எட்டு தொழிற்சங்கங்கள் இடையே ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இருதரப்பினரிடையே, கடந்த 4ம் தேதி முதல் சுற்று; 16 ம் தேதி இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

90 சதவீதம் சம்பள உயர்வு; 15 ஆயிரத்துக்கு மேல் உயரும் ஒவ்வொரு விலைவாசி புள்ளிக்கும், 30 பைசா பஞ்சப்படி உட்பட மொத்தம் 14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ளன, தொழிற் சங்கங்கள்.முதல் இரண்டு சுற்றிலும், 24 சதவீத சம்பள உயர்வும்; பஞ்சப்படி, 14.5 பைசாவும் வழங்க உற்பத்தியாளர் சங்கங்கள் சம்மதித்தன.மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை, சைமா சங்க அரங்கில் நேற்று மாலை நடந்தது. பேச்சுவார்த்தை குழு தலைவர் துரைசாமி (ஏற்றுமதியாளர் சங்கம்) தலைமைவகித்தார்.

உற்பத்தியாளர் சங்கம் தரப்பில், 'சைமா' பொதுச்செயலாளர் பொன்னுசாமி, துணை தலைவர் கோவிந்தப்பன் உட்பட 'நிட்மா', 'டீமா', சிம்கா', 'டெக்மா' சங்க பிரதிநிதிகள்.தொழிற்சங்கங்கள் தரப்பில், சி.ஐ.டி.யு., மூர்த்தி, சம்பத், ஈஸ்வரமூர்த்தி, ஏ.ஐ.டி.யு.சி, சேகர் மற்றும் எல்.பி.எப்., - எம்.எல்.எப்., - எச்.எம்.எஸ்., அண்ணா தொழிற் சங்கம், ஐ.என்.டி.யு.சி., - பி.எம்.எஸ்., சங்க பிரதிநிதிகள் பங்கேற்று பேசினர்.மாலை, 5:30 மணிக்கு துவங்கிய பேச்சுவார்த்தை, இரவு, 7:30 மணி வரை நடந்தது. நேற்றைய சுற்றிலும், தொழில் பிரச்னைகளை முன்வைத்து பேசிய உற்பத்தியாளர் சங்கத்தினர், 24 சதவீத உயர்வுக்கு உடன்படுவதாக தங்கள் முடிவை உறுதியாக தெரிவித்தனர்.

விலைவாசி உயர்வு உட்பட தொழிலாளர் பிரச்னைகளை சுட்டிக்காட்டிய தொழிற்சங்கத்தினர், கூடுதல் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என அழுத்தமாக தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். அதனால், மூன்றாம்கட்ட பேச்சுவார்த்தையிலும் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.'கடந்த 2016ல் போடப்பட்ட ஒப்பந்தம், கடந்த 2020 மார்ச்சில் முடிவடைந்து விட்டது. விரைந்து பேசி, உடனடியாக புதிய ஒப்பந்தம் கையெழுத்து மேற்கொள்ள இருதரப்பினரும் முயற்சிக்கவேண்டும். வரும் 27ம் தேதி நான்காம்கட்ட பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும்,' என, முடிவு செய்யப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X