சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீக்குளித்தபடி பாலத்தில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை

Added : ஆக 24, 2021
Share
Advertisement
வெள்ளவேடு : திருவள்ளூர், வெள்ளவேடு அருகே, வண்டலுார் - நெமிலிச்சேரி புறவழிச்சாலை பாலத்தில் இருந்து, நேற்று அதிகாலை வாலிபர் ஒருவர், உடலில் தீ வைத்தபடி குதித்து தற்கொலை செய்து கொண்டார்.தகவலறிந்த வெள்ளவேடு போலீசார், உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.இதில், தற்கொலை செய்த நபர், சென்னை, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவரது மகன்
 தீக்குளித்தபடி பாலத்தில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை

வெள்ளவேடு : திருவள்ளூர், வெள்ளவேடு அருகே, வண்டலுார் - நெமிலிச்சேரி புறவழிச்சாலை பாலத்தில் இருந்து, நேற்று அதிகாலை வாலிபர் ஒருவர், உடலில் தீ வைத்தபடி குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த வெள்ளவேடு போலீசார், உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.இதில், தற்கொலை செய்த நபர், சென்னை, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவரது மகன் சத்தியநாராயணன், 26, என்பது தெரிய வந்தது.மேலும், திருநின்றவூரில் உள்ள தன் மாமா வீட்டில் தங்கி, வடபழநியில் உள்ள சங்கர மடத்தில் சமையல் கலைஞராக பணிபுரிந்து வந்து உள்ளார்.

இவரது தம்பிக்குதிருமணமான நிலையில், இவருக்கு திருமணம் தள்ளிப்போனதால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், நேற்று அதிகாலை நெமிலிச்சேரி புறவழிச்சாலையில் சென்ற சத்தியநாராயணன், காவல்சேரியில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளார்.பின், வாகனத்தில் இருந்து பெட்ரோலை எடுத்து, உடலில் ஊற்றி தீ வைத்து, புறவழிச்சாலை பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X