பொது செய்தி

தமிழ்நாடு

12 புறநகர் ரயில்கள் நாளை பாதி வழியில் ரத்து

Added : ஆக 24, 2021
Share
Advertisement
சென்னை : தாம்பரம் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணி நடப்பதால், கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் 12 ரயில்கள் நாளை பாதி வழியில் ரத்து செய்யப்பட்டுள்ளன.சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 9:32 மணி, 10:10 மணி, 10:56 மணி, 11:50 மணி மற்றும் நண்பகல் 12:15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, நாளை ரத்து

சென்னை : தாம்பரம் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணி நடப்பதால், கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் 12 ரயில்கள் நாளை பாதி வழியில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 9:32 மணி, 10:10 மணி, 10:56 மணி, 11:50 மணி மற்றும் நண்பகல் 12:15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, நாளை ரத்து செய்யப்பட்டுள்ளன.

செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நிலையத்துக்கு காலை 9:40 மணி, 11:00 மணி, 11:30 மணி, நண்பகல் 12:20 மணி மற்றும் மதியம் 1:00 மணிக்கு இயக்க வேண்டிய மின்சார ரயில்கள், செங்கல்பட்டு - தாம்பரம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளன

கும்மிடிப்பூண்டியில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 7:50 மணிக்கும், செங்கல்பட்டில் இருந்து, கும்மிடிப்பூண்டிக்கும், காலை 10:30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், இருவழியிலும் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்பட்டு உள்ளன.

காஞ்சிபுரத்தில் இருந்து, சென்னை கடற்கரை நிலையத்துக்கு காலை 9:15 மணிக்கும், திருமால்பூரில் இருந்து கடற்கரை நிலையத்துக்கு காலை 10:40 மணிக்கும் இயக்க வேண்டிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன/

சிறப்பு ரயில்ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கு பதிலாக, நாளை காஞ்சிபுரத்தில் இருந்து பகல் 12:00 மணிக்கும், திருமால்பூரில் இருந்து பகல் 12:00 மணிக்கும், சென்னை கடற்கரை நிலையத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X