வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

Added : ஆக 24, 2021
Share
சேலையூர், ஆக. 24--வீட்டின் பூட்டை உடைத்து, நகைகள், வீட்டு உபயோக பொருட்களை திருடிச் சென்றவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், மோகன் நகர், 5வது தெருவில் வசிப்பவர் ஹரிஷ்குமார், 49; தனியார் நிறுவன ஊழியர். இவர், இம்மாதம்,8ம் தேதி, வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன், சொந்த ஊரான, கேரள மாநிலம், கோட்டயத்திற்கு சென்றார். நேற்று முன்தினம் இரவு, வீட்டிற்கு

சேலையூர், ஆக. 24--வீட்டின் பூட்டை உடைத்து, நகைகள், வீட்டு உபயோக பொருட்களை திருடிச் சென்றவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம், மோகன் நகர், 5வது தெருவில் வசிப்பவர் ஹரிஷ்குமார், 49; தனியார் நிறுவன ஊழியர். இவர், இம்மாதம்,8ம் தேதி, வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன், சொந்த ஊரான, கேரள மாநிலம், கோட்டயத்திற்கு சென்றார். நேற்று முன்தினம் இரவு, வீட்டிற்கு திரும்பி வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டின் பீரோவில் இருந்து, 11 சவரன் நகைகள், 25 கிராம் மதிப்புள்ள, வெள்ளி காசுகள், 'ஸ்மார்ட்' டிவி, விலை உயர்ந்த இரண்டு கேமராக்கள் மற்றும் மொபைல்போன், துணிகள் சமையலுக்கு பயன்படுத்தப்படும், 'மைக்ரோவேவ் ஓவன்' உட்பட, 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டிருந்தன. சம்பவம் குறித்து, சேலையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X